உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, செப்.8- மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடின்றி வேலைவாய்ப்பு அளிப்பது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து தரப்பினரும் ஆலோச னை நடத்தி வழிகாட்டு நெறிமுறை களை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னு சாமி தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை யிட்டுள்ளது.