states

img

பாஜக ஆளும் தில்லியில் கொடூரம் பள்ளியில் 11 வயது சிறுமி கொலை?

பாஜக ஆளும் தில்லியில் கொடூரம் பள்ளியில் 11 வயது சிறுமி கொலை?

புதுதில்லி தில்லியில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்ச ராக ரேகா குப்தா (பெண்) உள்ளார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் பாஜக  ஆட்சி அமைத்த நிலையில், அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மிக மோச மான அளவில் அதிகரித்து வரு கின்றன. இந்நிலையில், தில்லி புறநகர்ப் பகுதியான “நொய்டா செக்டார்-31” பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செப்., 4ஆம் தேதி 6 ஆம் வகுப்பு மாணவி தனிஷ்கா சர்மா (11 வயது) மயங்கி விழுந்ததாக தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.  அடுத்த சில நிமி டங்களில் பள்ளி ஆசிரியர்கள் தனிஷ்கா சர்மா உயிரிழந்ததாக பெற் றோர்களுக்கு தகவல் தெரிவித்த னர். இத்தகைய சூழலில், சிறுமி யின் உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில்,“கார ணத்தை உறுதி செய்ய முடியாத மரணம்” என குறிப்பிடப்பட்டிருப்பது குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையா? செப்., 4ஆம் தேதி மதிய உணவு சாப்பிடும்போது தனிஷ்கா மயக்கம டைந்ததாக பெற்றோர்களிடம் முதலில் தெரிவிக்கப்பட்டது. படிக்கட்டுகளில் இருந்து இறங்கும்போது சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல்களுக்கு இடையே பள்ளியின் சிசிடிவி காட்சி களை பெற்றோர்களிடம் பகிர மறுத்துள்ளனர். மேலும், பள்ளியின் சிசிடிவி கேமிராக்களில் கோளாறு இருந்ததாகவும், மாணவி விழுந்த தாக கூறப்படும் பகுதி கேமிரா கண்கா ணிப்பில் இல்லை என்றும் தில்லி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மழுப்பலாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளி யிலேயே கொலை செய்யப்பட்டாரா? இல்லை பாலியல் பலாத்கார முயற்சியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டதா? என்ற பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. இதனிடையே, பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதால் சிறுமி மரணம் தொடர்பாக தில்லி காவல்துறை நீண்ட நாள் கழித்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போது தில்லி காவல்துறையினர் பள்ளியின் அனைத்து சிசிடிவி காட்சி களையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜக ஆளும் தில்லியில் படிக்கும் பள்ளியிலேயே 11 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.