states

img

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் மதமாற்றக் குற்றச்சாட்டில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் மதமாற்றக் குற்றச்சாட்டில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது

கத்தோலிக்க ஆயர்களின் அமைப்பு கடும் கண்டனம்

மோடி 3ஆவது முறை யாக பிரதமர் ஆன பின்பு நாட்டில் வகுப்புவாத சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தலித், பழங்குடியினர், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள், வெறுப்பு குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் சத்தீஸ்கரில் இரண்டு கேரள கன்னி யாஸ்திரிகள் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தற்கு கேசிபிசி விஜிலென்ஸ் ஆணையம் என்னும் கேரள கத்தோ லிக்க ஆயர்களின் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேசிபிசி விஜிலென்ஸ் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சத்தீஸ்கரில் மத மாற்றக் குற்றச்சாட்டில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது  மிக வும் வேதனையானது மற்றும் கண்டிக்கத்தக்கது. மத மாற்றம் மற்றும் மனித கடத்தல் தொடர்பாக பஜ்ரங் தள ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், துர்க் காவல்துறையினர் கன்னியாஸ்திரி கள் வந்தனா பிரான்சிஸ் , பிரீத்தி மேரி ஆகியோரை பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மற்றும் மிஷ னரிகள் மீது அதிகரித்து வரும் வெறுப்பின் ஒரு பகுதியாகும்.   தீவிரவாதக் குழுக்கள், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது நியாயமற்றது மற்றும் நாட்டில் மத சிறுபான்மையினரின் அரசி யலமைப்பு உரிமைகளுக்கு கடு மையான அச்சுறுத்தலை ஏற் படுத்துகிறது. கத்தோலிக்க மிஷ னரிகள் கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுவதில்லை. கல்வி, சுகா தாரம் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் திருச்சபையின் சேவைகள் தொண்டு மற்றும் பொது நன்மைக்கான உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. மதத்தைத் தேர்ந்தெடுத்து பின் பற்றுவதற்கான சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பின் 25ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். இந்த உரிமையை குற்றமாக்கவோ அல்லது நசுக்கவோ செய்யும் எந்தவொரு முயற்சியும் அரச மைப்பு மாண்புகளை மீறுவதாகும். இது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். பொய்யான குற்றச்சாட்டு களைச் சுமத்தி, கன்னியாஸ்திரி களை தன்னிச்சையாக கைது செய்தவர்கள் மீது சட்ட நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற அதிகார துஷ்பிரயோ கத்தைத் தடுக்க தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கிறிஸ்த வர்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தல் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் சிறு பான்மையினர் விவகார அமைச் சர் ஆகியோர் உடனடி மற்றும் தீர்க்க மான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒன்றிய அரசு அமைதியாக இருக்கக்கூடாது, அனைத்து குடிமக்களின் அரசமைப்பு சாசன உரிமைகள், சமூக நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான பாதுகாவலராக, அவர்களின் மதப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் செயல்பட வேண்டும். மத வெறியைத் தடுக்க வும், கும்பல் கொலைகளைத் தடுக்கவும், இந்தியா அதன் ஜன நாயக, மதச்சார்பற்ற மற்றும் உள்ளடக்கிய அடையாளத்தைப் பாதுகாக்கவும் வலுவான நடவ டிக்கைகளை எடுக்குமாறு அர சாங்கத்தைக் கேட்டுக் கொள்கி றோம்” என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

பிரதமருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கிடைக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று முதல மைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். சத்தீஸ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்திற்கு வேலைக்கு வந்தவர்களை அழைத்துச் செல்ல வந்த சகோதரிகள் வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிறகு தங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர்க ளது உறவினர்கள் புகார் அளித்ததாகவும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக்காட்டினார். இந்த விசயத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டு வெளிப்படையான மற்றும் நியாயமான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.

கன்னியாஸ்திரி பிரீத்தி மேரியின் பெற்றோருக்கு அமைச்சர்கள் ஆறுதல்

சத்தீஸ்கரில் இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட விசாரணை யையடுத்து கைது செய்யப்பட்ட மலையாள கன்னியாஸ்திரி பிரீத்தி மேரியின் வீட்டிற்கு அமைச்சர்கள் பி. ராஜீவ் , ரோஷி அகஸ் டின் ஆகியோர் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்தனர். சாத்திய மான அனைத்து சட்ட  வழிகளையும் தேடி வருவதாகவும், முதல மைச்சர் இந்த விசயத்தில் தலையிட்டு அமைச்சர்க ளுக்கு மேலும் நடவ டிக்கை எடுக்க உத்தர விட்டதாகவும் அமைச்சர் பி. ராஜீவ் முகநூலில் தெரிவித்துள்ளார்.