states

img

யூடியூப் சேனல் தொடங்க இனி உரிமம் கர்நாடகா அரசு பரிசீலனை

யூடியூப் சேனல் தொடங்க இனி உரிமம் கர்நாடகா அரசு பரிசீலனை

கர்நாடகத்தில் சமீபத்தில் உரு வாக்கப்பட்ட மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, டிவி சேனல்களைப் போலவே, யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்ற பிறகே செயல்பட அனு மதிக்கும் நடைமுறையைக் கொண்டு வர அம்மாநில அரசு பரிசீலனை செய்து  வருகிறது. இதுதொடர்பாக மின்னணு ஊடக  பத்திரிகையாளர் சங்கத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய முதலமைச்சர்  சித்தராமையா,“செய்தி சேனல்கள் தொடங்கவும் செய்திகளை ஒளிபரப்ப வும் கண்டிப்பாக உரிமங்கள் தேவை. ஆனால், யூடியூப் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் செய்திகளை ஒளிபரப்ப உரிமம் தேவையில்லை என்ற நிலை இருந்தது. தற்போது யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களும் செய்தி ஒளிபரப்ப உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம்” என அவர் கூறினார்.