states

img

ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் விழாக்களில் பங்கேற்பது தவறல்ல தசரா

ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் விழாக்களில் பங்கேற்பது தவறல்ல தசரா விழாவை இஸ்லாமிய எழுத்தாளர் தொடங்கி வைக்கலாம் பாஜக மூத்த தலைவரின் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று தசரா. அக்டோபர் 2ஆம் தேதி  கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழா கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது ஆகும்.  இந்நிலையில், கர்நாடக மாநி லம் மைசூருவில் தசரா கொண்டாட் டங்களைத் தொடங்கி வைக்க  “புக்கர் பரிசு” பெற்ற எழுத்தாள ரும், சமூக நல ஆர்வலருமான பானு முஷ்டாக்கிற்கு காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனை எதிர்த்து மைசூரு வைச் சேர்ந்த முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா (பாஜக), பெங்களூரு வைச் சேர்ந்த கிரிஷ் குமார், சௌம்யா, எச்.எஸ்.கவுரவ் ஆகி யோர் கூட்டாக கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு செவ்வாய்க் கிழமை அன்று உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர்கள்,”தசரா விழா ஒரு பாரம்பரியமான இந்து விழா ஆகும். அதனை இஸ்லாமியரான பானு முஷ்டாக் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைப்பது ஏற்புடையதல்ல. இந்து அல்லாதவராக இருப்பதால், மத விழாக்களையும் உள்ளடக்கிய தசரா விழாவைத் தொடங்கி வைக்க அனுமதிக்கக் கூடாது” என வாதிட்டனர். அரசு தரப்பு வாதத்திற்கு பின்பு உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி விபு பக்ரு,”அரசி​யலமை ப்பு சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​யின்​படி, அரசின் நிகழ்ச்சி நிரலை பிறர் தீர்​மானிக்க முடி​யாது. ஒவ்​வொரு இந்​திய குடிமக​னுக்​கும் அரசின் நிகழ்​வில் பங்​கேற்கும் உரிமை உள்​ளது. தசரா விழாவில் பானு முஷ்டாக் பங்கேற்பது அரசி யல் சாசனத்தை மீறும் செயல் அல்ல. பல பொறுப்புகளில் இருந்தவர் பானு முஷ்டாக். அத னால் தசரா விழாவில் பங்கேற்க தகுதியானவர்தான். பானு முஷ்டாக் நிகழ்ச்​சியை தொடங்கி வைத்​தால் இந்​துக்​களின் மனம் புண்​படும் என்​பதை ஏற்க முடி​யாது. எனவே மனுதாரர்களின் வாதங்களை நிராகரிக்கிறோம்” என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.