புதுதில்லி, பிப்.23- அதானி குழுமத்துக்கு ஹைப்பா துறைமுகம் விற்பனை செய்யப்பட் டது இந்தியா மீதான இஸ்ரேலின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவுர் கிலோன் தெரிவித் துள்ளார். இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக ஹைப்பா (The Port of Haifa) துறைமுகம் திகழ்கிறது. அந்நாட் டின் சரக்குக் கண்டெய்னா்களில் பாதியளவை கையாளும் அந்தத் துறைமுகம், பயணிகள் கப்பல் களுக்கும் மிக முக்கியத் துறைமுக மாக உள்ளது. இந்தத் துறைமுகத்தைக் கடந்த மாதம் 1.2 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ. 9,900 கோடி) அதானி குழுமம் வாங்கியது. அண்மையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுகையில், இந்தியா - இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு ஒப்பந் தங்களில் அதானி குழுமம் பலன டைவதாக பகிரங்க குற்றம் சாட்டி னார். ஹைப்பா துறைமுக ஒப்பந் தத்தை மறைமுகமாக குறிப்பிட்டுத் தான் ராகுல் காந்தி இந்த குற்றச் சாட்டை கிளப்பினார். ஆனால், உரிய ஆதாரம் இல்லாமல் நரேந்திர மோடி அரசு மீது குற்றம் சாட்டுவ தாகக் கூறி, ராகுலின் பேச்சு அவைக் குறிப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டது.
அவ்வாறு மோடி அரசால் அதானி பலனடைந்ததாக ராகுலால் கூறப்படும் ஹைப்பா துறைமுக ஒப்பந்தம் குறித்துத்தான், இஸ்ரேல் தூதர் நவுர் கிலோன் தில்லி செய்தி யாளர் சந்திப்பில் பேசியுள்ளார். “இருநாட்டு பாதுகாப்பு ஒப்பந் தங்கள் என்பது ஒரேயொரு (அதானி) நிறுவனம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. இந்தியாவில் டாடா குழு மம், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஹிந் துஸ்தான் ஏரோநாடிக்ஸ், பாரத் டைனாமிக்ஸ் உள்பட பல நிறுவனங்களுடன் இஸ்ரேல் நிறு வனங்கள் கூட்டு வைத்துள்ளன. இருநாட்டு நிறுவனங்களின் கூட்டு வணிக ஏற்பாட்டில் இஸ்ரேல் அரசு கையொப்பமிடுவதில்லை. அத்தகைய ஏற்பாட்டுக்கு இஸ்ரேல் அரசு அழுத்தம் அளிப்பதும் இல்லை” என்று கூறியிருக்கும் நவுர் கிலோன், மறுபுறத்தில், “அதானி குழுமம் ஹைப்பா துறைமுகத்தை வாங்கியது மைல்கல்லாகும். அந்தத் துறைமுகம் மதிப்புமிக்க சொத்து. அதனை இந்திய நிறு வனத்திடம் ஒப்படைத்தது, இந்தியா மீது இஸ்ரேல் வைத்துள்ள ஆழ மான நம்பிக்கையின் அடையாளம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஹைப்பா பகுதியி லும், இந்தியா - இஸ்ரேல் இடையி லும் வா்த்தகத்தை அதிகரிக்க அதானி குழுமத்தால் துறை முகத்தை மேம்படுத்த முடியும். அதற்கான திறன் அந்தக் குழுமத்தி டம் பெரிய அளவில் உள்ளது” என் றும் இஸ்ரேல் தூதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.