states

img

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரான்

புதுதில்லி, ஜூலை 4 - ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்ட மைப்பில், 9-ஆவது நாடாக ஈரானும் இணைந்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின்  (Shanghai Cooperation Organisation - SCO) 23-ஆவது மாநாடு, செவ்வாயன்று தில்லியில் காணொலி காட்சி வாயிலாக  நடைபெற்றது. இந்த அமைப்பில் புதிய நிரந்தர உறுப்பினராகியுள்ள ஈரானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.  மாநாட்டிற்குத் தலைமை வகித்து உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “ஈரான் எஸ்சிஓ குடும்பத்தில் புதிய  உறுப்பினராக இணைவதில் நான் மகிழ்ச்சி யடைகிறேன்” என்று கூறி வரவேற்றார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடு களின் ஆதிக்கத்திற்கு எதிராக, 2001-ஆம்  ஆண்டு ரஷ்யா, சீனா மற்றும் மத்திய ஆசி யாவில் உள்ள முன்னாள் சோவியத் நாடு களால் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்ட மைப்பு (Shanghai Cooperation Organisation - SCO) ஏற்படுத்தப்பட்டது. இதில், கடந்த 2017-ஆம் ஆண்டு, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளும் இணைந்தன. இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், ஷாங்காய் ஒத்து ழைப்பு கூட்டமைப்பின் 23-ஆவது மாநாடு, காணொலி காட்சி வாயிலாக செவ்வா யன்று நடைபெற்றது. நடப்பாண்டிற்கான தலைவர் என்ற முறையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநாடு நடைபெற்றது. மக்கள் சீனக் குடியரசின் தலைவர் ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இதர நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் மாநாட்டில் கலந்து கொண்டனர். ஐக்கிய  நாடுகள், ஆசியான் உள்ளிட்ட 6 சர்வதேச,  பிராந்திய அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

பிராந்திய பாதுகாப்பு நிலவரம், வர்த்தகம், நாடுகள், போக்குவரத்து தொடர்பை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான் நிலவரம், உக்ரைன் மீதான போர் விவகாரம் எஸ்.சி.ஓ. அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.  கூட்டமைப்பில் ஈரான் 9-ஆவது உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த அமைப்பில் தங்களையும் இணை த்துக் கொள்ளுமாறு 2006-ஆம் ஆண்டில்  ஈரான் விண்ணப்பித்தது. ஆனால் 2021-  ஆம் ஆண்டில்தான் அவர்களது விண்ணப் பம் பரிசீலனைக்கு வந்தது. அந்நாட்டை இணைப்பதற்கான பணிகள், 2022-ஆம்  ஆண்டு மார்ச்சில் தொடங்கின. அதே  ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உறுதி  மொழிப் பத்திரத்தில் ஈரான் கையெழுத் திட்டது. அக்டோபர் 2022-இல் ஈரான்  நாடாளுமன்றத்தில், எஸ்ஓசி கூட்டமைப் பில் சேருவதற்கான ஒப்புதலைப் பெற்றது. அதைத்தொடர்ந்தே செவ்வாயன்று நடை பெற்ற கூட்டத்தில் ஈரானை முழு உறுப்பின ராக சேர்ப்பதற்கான ஒப்புதல் வழங்கப் பட்டது. மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  “எஸ்சிஓ குடும்பத்தில் ஈரான் புதிய உறுப் பினராக இணைவதில் நான் மகிழ்ச்சி யடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.

;