அகமதாபாத், ஜுன் 27- முன்னாள் ஐபிஎஸ் அதி காரி சஞ்சீவ் பட், பிப்ரவரி 17, 2002 அன்று, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் இனப்படுகொலை சதி பற்றி உச்ச நீதிமன்றத்தில் சாட்சி யம் அளித்த பின்னர், பாஜக வின் ஹிட் லிஸ்டில் சேர்க்கப் பட்டார். 1988 இல் ஐஐடி மும்பை யில் எம்.டெக் படித்தவர் சஞ்சீவ் பட். 1999 முதல் 2002 வரை குஜராத் உளவுத்துறை யின் துணை ஆணையராக இருந்தார். முதல்வர் நரேந்திர மோடியின் பாது காப்புப் பொறுப்பிலும் இருந் தார். பட்டுடன் ராணுவத்தில் சேர்ந்தவர்கள் 2007 இல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால், அரசின் அதிருப்தியால் எஸ்பி பதவியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் பட்டுக்கு ஏற் பட்டது. குஜராத் இனப்படு கொலையில் சிறப்புப் புல னாய்வுக் குழு (எஸ்ஐடி) உண்மையை மறைப்பதா கக் கூறி சஞ்சீவ் பட்டால் கடந்த 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப் பட்டார். 2012 இல், பட் உட்பட காவல் துறையினர் ஏழு பேர் 1990 இல் நடந்த காவல் மரணம் தொடர்பான குற்றச் சாட்டுக்கு உள்ளாயினர். இந்த வழக்கில், பட்டுக்கு 2019 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2015 இல், பட் காவல்துறை சேவையிலி ருந்து நீக்கப்பட்டார். அவர் இன்னும் சிறையில் இருக் கிறார்.