states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

ஒரு கொடிய நகைச்சுவை

இந்தியா, சுற்றுச் சூழலை பாதுகாத்துக் கொண்டே பொருளாதார வளர்ச்சியை உறுதி  செய்ய முடியும் என்பதை உலகிற்கு காட்டியுள்ளது என சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.  அவரது உரை வெளியான அதே தருணத்தில், இந்தி யாவின் வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் முதலில் குறிப்பிட்டிருந்த 8 சதவீதமாக இருக்காது; 6.5 சத வீதமாக வீழ்ச்சியடையும் என்று தனது கணிப்பை வெளியிட்டது உலக வங்கி. அதே வேளையில் 2022  ஆம் ஆண்டுக்கான சுற்றுச் சூழல் மேம்பாட்டு செயல்பாடு குறித்த அறிக்கையில் இந்தியா கீழ்  நிலையிலேயே உள்ளது என்ற தகவலும் வெளி யானது. குறிப்பாக 2014 முதல் 2019 வரையிலான  காலத்தில் அதிகாரப்பூர்வ மக்களவை விபரங்க ளின் படி, ஒரு கோடியே 9 லட்சத்து 75 ஆயிரத்து 844 மரங்கள் பிரதான இடங்களில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில் வெட்டப்பட்டுள்ளன என்பதை  இப்போது நினைவு கூரலாம். மீண்டும் மீண்டும்  மோடியின் படாடோப பிரச்சாரமும் மார்தட்டிக்  கொள்வதும் ஒரு கொடிய நகைச்சுவையாகவே மாறுகிறது. அதையும் தாண்டி இப்போது அவர் கூறியிருப்பது வெட்கம்! வெட்கம்!
 

;