states

குஜராத்தில் இந்தியாவின் முதல் சிலிக்கான் ஆலை ரூ.80 ஆயிரம் கோடி மானியத்துடன் அமைகிறது

புதுதில்லி, செப்.23- தைவான் நாட்டின் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் இந்தியாவில் முதல் சிலிக்கான் ஃபேப்ரிகேஷன் ஆலையை ரூ.38,831 கோடி மதிப்பில்  குஜராத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.  அதனுடன் கர்நாடகாவில் சிங்கப்பூரின் ஐஎஸ்எம்சியின் கிளாஸ் யூனிட் ஒன்றும் ரூ.22,900 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆலை மூலம் வெட்டி யெடுக்கப்படும் சிலிக்கான்கள் கணினி, சூரிய ஒளி சக்தி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். வேதாந்தாவின் இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு ரூ.80,000 கோடி மானியம் அளித்துள்ளது. ஆனால் கிட்டத்தட்ட எட்டு கோடிக்கும் அதிகமான 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு வெறும் ரூ.73,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.  மானியங்களே கூடாது. இல வசங்களே கூடாது என கூப்பாடு போடும் பாஜக 100 நாள் வேலைத்திட்ட பணி யாளர்களுக்கு வழங்கும் தொகையை விட அதிகத் தொகையை வேதாந்தா நிறுவனத்திற்கு அளிக்க உள்ளது. ஏழை-எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட இலவசம் தரமறுக்கும் ஒன்றிய பாஜக அரசு. பெரும் முதலாளிகளுக் கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி மானியமாகத் தருகிறது.

;