உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால், பெரும்பாலான மாவட் டங்களில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதனால் உத்தரப்பிரதேசத் தில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சித்ரகூட் மாவட்டத் தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மஹோபா, பந்தா மற்றும் மொராதாபாத்தில் தலா 3 பேரும், காஜிப்பூர், லலித்பூர், கோண்டா வில் தலா ஒருவரும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 8 பேர் நீரில்மூழ்கி யும், பாம்புக்கடியால் 2 பேரும் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.