விடாமல் வெளுத்து வெளுத்து வாங்கும் கனமழை இமாச்சலில் பலி 360ஆக உயர்வு
சிம்லா விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை இமாச்சலில் பலி 360ஆக உயர்வு இமயமலைச் சாரலில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலம் கடந்த 2 மாத காலமாக தொடர்ச்சி யான கனமழையால் இயல்புநிலை இன்றி தவியாய் தவித்து வருகிறது. மேலும் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வரு வதால் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், இமாச்சலில் பருவ மழைக்கு உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. இது வரை மழை தொடர்பான சம்பவங்களில் 197 பேரும், சாலை விபத்துகளில் (நிலச் சரிவு, வாகனம் ஆற்றுக்குள் கவிழ்ந்து) 163 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள் ளது. மேலும் மூன்று தேசிய நெடுஞ்சாலை களில் (NH-03, NH-305, NH-505) நிலச்சரிவு, மண்சரிவு, திடீர் வெள்ளம் காரணமாக தடைப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,992 மின்விநியோக மின்மாற்றிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதே நேரத்தில் 472 நீர் வழங்கல் திட்டங்கள் செயல்படவில்லை என மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் கனமழை யால் வீடுகளை இழந்து எத்தனை பேர் முகாம்களில் உள்ளனர் என்பது தொடர் பாக தெளிவான அறிக்கை எதுவும் வெளி யாகவில்லை. ஹைதராபாத் சிபிஐ இயக்குநருக்கு உடல்நலக்குறைவு மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக இருப்பவர் பிரவீன் சூட். இவர் சனிக்கிழமை அன்று தெலுங்கானா மாநிலம் நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் பகுதிக்கு சென்றார். தனிப்பட்ட பயணமாக சென்ற பிரவீன் சூட் ஹைதராபாத் சிபிஐ அலுவலக அதி காரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்ரீசைலத்தில் இருந்து ஹைதராபாத் திரும்பிய போது பிரவீன் சூட்டிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரவீன் சூட் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.