அவமதிப்புக்குள்ளாகும் குஜராத் நீதிமன்றங்கள்
முன்பு கழிவறை ; தற்போது பீர்
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் நீதிமன்ற விசாரணை கள் ஆன்லைன் மூலமாக நடை பெற்று வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட படிப்பறிவு அதிக முள்ள மாநிலங்களில் நீதிமன்ற ஆன்லைன் விசா ரணைகள் நன்றாக நடைபெற்று வருகின்றன. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக குஜ ராத் மாநில மக்கள் ஆன்லைன் விசாரணைக ளின் போது நீதித்துறை அவமதிக்கும் வகை யில் செயல்பட்டு வருகின்றனர். 2 வாரத்திற்கு முன்பு குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஒருவர் கழிவறையில் அமர்ந்தபடியே ஆன்லைன் விசாரணையில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து கடந்த ஜூன் 25ஆம் தேதி குஜ ராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்தீப் பட் முன்னிலையில் நடந்த ஆன்லைன் விசாரணை ஒன்றில், மூத்த வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா என்பவர் மதுபான வகையான “பீர்” அருந்திய படியும், தொலைபேசியில் பேசியபடியும் விசார ணையில் கலந்துகொண்டார். இந்த அதிர்ச்சி யூட்டும் காணொலி சமூகவலைதளங்களில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அகமதாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் இந்த விவகாரம் அகமதாபாத் உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா, ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வின் கவ னத்திற்கு வந்தது. வழக்கறிஞரின் இந்த நடத்தை யை கண்டித்த நீதிபதிகள்,”இதுபோன்ற செயல் கள் சட்டத்தின் ஆட்சிக்கு குந்தகம் விளை விக்கும். ஆன்லைன் விசாரணைகளில் பங்கேற்க தற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்பட்ட மூத்த வழக்க றிஞர் என்ற அந்தஸ்து திரும்பப் பெறுவது குறித்தும் பரிசீலிக்கப்படும். இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசார ணைக்கு வரும்” எனக் கூறி, வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யவும், நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்டுள்ளனர்.