states

img

தீக்கதிர் விரைவு செய்திகள் (இந்தியா)

 • அசாமில் ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பலியானதாக வடகிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
 • அணை பாதுகாப்பு மசோதாவை ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத் டிசம்பர் 1 அன்று மாநிலங்கள வையில் தாக்கல் செய்தார். 
 • இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும்  வீடியோக்களை டிவிட்டரில் பதி வேற்றம் செய்ய முடியாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 • பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரி வினருக்கு இடஒதுக்கீடு வழங்கு வதற்கான அளவுகோல்களை மறுபரி சீலனை செய்ய ஒன்றிய அரசு குழு அமைத்துள்ளது.
 • இஸ்ரேலின் அதிநவீன ஹெரோன் உளவு விமானங்கள் இந்திய ராணு வத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
 • ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டு களில் 8.30 லட்சம் பேர் சிகிச்சைபெற்று ள்ளதாக புதன்கிழமை மாநிலங் களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்தியாவில் வருகிற டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்க இருந்தநிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று காரண மாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
 • இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 • ராஜஸ்தானில் மீண்டும் அமைச்சரவை மாற்றப்படுவது குறித்து முதல்வர் அசோக் கெலாட் மறைமுகமாகப் பேசி யுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளது. 
 • தவணை முறையில் பொருள்கள் வாங்கும் போது அதற்கான செயல்பாட்டுக் கட்டணமாக ரூ.99 செலுத்த வேண்டியது இருக்கும்.
 • மாநிலங்களின் கையிருப்பில் 24.16 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகஒன்றிய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
 • கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கழிவுகளை பாதிப்பு ஏற்படாதவாறு சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு மக்களவையில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
 • ஜம்மு & காஷ்மீரில் 2018-க்கு பிறகு ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநிலங் களவையில் தெரிவித்துள்ளது.
 • எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரி வித்துள்ளார்.
 • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8  குறைக்கப்படுவதாக தில்லி அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
 • ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும்  பயணிகள் அனைவருக்கும் கடுமை யான புதிய கட்டுப்பாடுகள் அனைத்து விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.
   
;