இந்தியாவில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகி யோர் சமூக நீதிக்காக போராடினார் கள். ஆனால் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் இருவரையும் உள்ளடக்கி ஒருங்கே அமைந்த தலைவராக தோழர் ஏ.பி. என்ற ஏ.பாலசுப்பிரமணியம் திகழ்ந்தார். திண்டுக்கல்லில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழிலாளர்கள் என தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடையே தொழிற்சங்கத் தலைவராக விளங்கினார். மூடநம்பி க்கையில் வீழ்ந்து கிடந்த தொழிலாளி வர்க்கத்திற்கு பகுத்தறிவை அவ்வப்போதுபோதித்த பெரியாராகவும் திகழ்ந்தார்.கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மிக எளிமையாகவும், பாட்டாளி வர்க்க சிந்தனைகளை, தத்து வங்களை மிக எளிமையாகவும் தோல் பதனிடும் தொழி லாளிக்கு கற்றுத் தந்த ஆசான் என்றால் அது ஏ.பி.தான். தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராடுவது என்றில்லாமல் ஏ.பியிடம் அரசியலையும் கற்றுத்தேர்ந்த தொழிலாளி வர்க்கம் தான் திண்டுக்கல்லில் நடைபெற்ற நகர்மன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து,
மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்த முயன்ற இந்து முன்னணி வேட்பாளரின் வெற்றியை தடுத்தது. அத்துடன் சவேரியார் பாளை யம் மக்கள் திமுக வேட்பாளரை வெற்றி பெறவும் செய்தனர். ஏ.பி. பன்முகத்தன்மையுடன் கூடிய அறிவுஜீவியாக இருந்தாலும் அதை ஒரு போதும் காட்டிக்கொண்டவர் அல்ல. எளிமையான வாழ்க்கையை சாதாரண கட்சித்தொண்டரைப் போல தன்னுடைய இறுதிக்காலம் வரை வாழ்ந்தார். பெரியதலைவர் என்ற செருக்கில்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகியதால் அனைவரா லும் நேசிக்கப்பட்டார். மார்க்சிய - லெனினியக் கொள்கையில் ஆழமான பிடிப்பு கொண்டவராக இருந்ததால் கட்சித் தோழர்களுக்கு அரசியல் கல்வி அளிப்பதில் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டார். லெனின் வகுத்துக்கொடுத்த ஸ்தாபன மரபுகளை கடைப் பிடிப்பதில் உறுதியுடன் செயல்பட்டார். வர்க்கப் போராட்டங் களிலும் அடக்குமுறையின் போதும் தோழர்களுக்கு வர்க்க அரசியலை புகட்டிவிட்டால் அவர்களை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை தொடர்ந்துசுட்டிக்காட்டினார். அவரது நினைவு நாளில் இப்பயணத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்.
- என்.பாண்டி