புதுதில்லி, மார்ச் 23- அமெரிக்காவுடனான விவாதத்துக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தின் போது மன் மோகன் சிங் அமைச்சரவை அளித்தவை வெற்று வாக்குறுதிகள் என்பதை புள்ளி விவ ரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் அணு மின் உற்பத்தி மொத்தத்தில் மூன்று சதவிகிதம் மட்டுமே என மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி.யின் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். மன்மோகன் சிங் முதலாவது அரசாங்கத் தின் போது அரசியல் கொந்தளிப்பை ஏற்படு த்திய அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை இப்போது வெளிப்படுத்திய தகவல்கள் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க உடன்படி க்கைக்கு எதிராக இடதுசாரிகள் யுபிஏ அரசுக் கான ஆதரவை வாபஸ் பெற்றனர். அப் போது, அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் போது அணு மின்சாரம் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் கூறியது. இது ஒரு வெற்று வாக்கு றுதி என்பதை இந்த பதில் நிரூபிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மின் உற்பத்தி பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்து ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். இந்த காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அணு சக்தி மொத்த மின் உற்பத்தியில் 3.15 சதவிகித மாக இருந்தது என்று அமைச்சர் கூறினார். இந்தக் காலக்கட்டத்தில் அணு மின்சாரம் கிலோவாட் ஒன்றுக்கு 314.33 பைசாவாக விற்கப்பட்டது. அப்போது நீர் மின்சாரம் 271.48 பைசாவுக்கு விற்பனையானது. இதன் மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூறியது போல் மின்சாரத்தின் விலையை குறைக்க முடியாது என்பதும் தெளிவானது.