2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பு பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதம் 1-ஆம் தேதிக்குள் இணையதள முகவரி மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகை அடிப்படையில் மீண்டும் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட நிர்வாகமும் இதே சலுகையை வழங்கியுள்ளது. இணைய வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.