states

img

மதராஸி குடியிருப்பை அகற்றி தமிழர்களை துரத்த தில்லி பாஜக அரசு தீவிரம்

மதராஸி குடியிருப்பை அகற்றி  தமிழர்களை துரத்த தில்லி பாஜக அரசு தீவிரம்

சிபிஎம் தலைமையில் ஜங்புராவில்  பிரம்மாண்ட போராட்டம் ; 500க்கும் மேற்பட்டோர் கைது

பெண்கள், குழந்தைகளை வலுக்கட்டாயமாக கைது செய்து தில்லி காவல்துறை அடாவடி

ல்லியின் ஜங்புரா பகுதியில் உள்ளது மதராஸி கேம்ப். தமிழர்கள் வாழும் இந்த பகுதியில் 350க்கும் மேலான குடும் பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக ஆட்சி யில் அமர்ந்தவுடன் ஜங்புரா, மத ராஸி மற்றும் பாஸ்தி குடியிருப்பில் வசிக்கும் தமிழர்களின் குடியி ருப்புகளை இடித்து, தமிழர்களை வெளியேற்ற தில்லி அரசு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகளையும் தில்லி பாஜக அரசு தொடங்கியுள்ளது. மேம்பாலம் புனரமைப்பு, கால் வாய் தூர்வாரும் பணி, மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப் போவ தாக சாக்குப் போக்குக் கூறியும்,  மிரட்டியும் தமிழர்களை குடும்பத்து டன் விரட்டி வருகிறது தில்லி பாஜக அரசு.  மதராஸி குடியிருப்பை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறை அடாவடி

இத்தகைய சூழலில், செவ்வா யன்று ஜங்புரா பகுதியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் தமிழர்கள் அனைவ ரும் ஒன்றிணைந்து மதராஸி குடி யிருப்பை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக் கையுடன் தில்லி தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி காந்தி சமாதி பகுதியிலிருந்து தலை மைச் செயலகம் நோக்கி பேரணியா கச் செல்ல முயன்ற போது, தில்லி காவல்துறையினர்  அடாவடியாக தமிழர்களையும், சிபிஎம், சிஐடியு, வாலிபர் சங்க ஊழியர்களையும் தடுத்து நிறுத்தினர். கைது செய்து பேருந்தில் ஏற்ற வலுக் கட்டயமாக இழுத்துச் சென்றனர். இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 500க்கும் மேற் பட்ட தமிழர்கள், சிபிஎம், சிஐடியு, வாலிபர் சங்க ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். தில்லி காவல் துறையின் இந்த அடாவடி நடவ டிக்கைக்கு நாடு முழுவதும் கண்ட னங்கள் குவிந்து வருகின்றன.

40 கி.மீ., தொலைவிற்கு விரட்டுகிறார்கள்

இதுதொடர்பாக போராட்டத் தில் பங்கேற்ற ஜங்புரா தமிழர்கள் கூறுகையில்,”தில்லி பாஜக அரசு எங்களை குடியிருப்பில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுத்து வரு கிறது. ஏன் என்று கேட்டால் மேம் பாலம் புனரமைப்பு, கால்வாய் தூர்வாரும் பணி, மெட்ரோ பணி ஆகியவை மேற்கொள்ள உள்ள தாக தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு வாழும் சுமார் 350க்கும் மேற் பட்ட குடும்பங்களை மாற்று  இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனால், மாற்று இடம் 40 கி.மீ., தொலைவில் உள்ளதால்  குழந்தைகளின் கல்வி பாதிக்கும்; பணிக்கு செல்பவர்கள் தங்கள் வேலை இழக்க நேரிடும். எங்களது வாழ்வாதாரமே முற்றிலும் பாதிக்கும். எனவே ஜங்புராவின் மதராஸி குடியிருப்பை அகற்றும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என கண்ணீ ருடன் கூறினர்.

சிபிஎம் தில்லி மாநிலக்குழு கண்டனம்

தில்லியில் தமிழர்கள் குடியிருக்கும் மதராஸி, பாஸ்தி, ஜங்புரா பகுதிகளிலிருந்து அவர்க ளை வெளியேற்றும் நடவடிக்கையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தில்லி மாநிலக்குழு சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ”தில்லியில் உள்ள மதராஸி, பாஸ்தி, ஜங்புரா பகுதிகளில் சுமார் 50 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும் பான்மையானவர்கள் தமிழர்களாவர். இவர்கள் அன்றாடம் உழைத்து வாழும் ஏழை  உழைப்பாளி மக்களாவர். இவர்களில் பெரும்பகு தியினர் குடும்பங்களில் வேலை செய்யும் பெண்களாவார்கள்.  இவர்களுக்கு மாற்று இடம் எதுவும் தராமல் இவர்களை அப்புறப்படுத்தும் பணியில் தில்லி ஆட்சியாளர்கள் ஈடுபட்டி ருக்கிறார்கள். வாக்குறுதிக்கு மாறாக பாஜக இவ்வாறு ‘எங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தக்கூடாது’ என்று அங்கே குடியி ருக்கும் மக்கள் தில்லி முதலமைச்சருக்கு மனு கொடுக்க விரும்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டார்கள். சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற சம யத்தில் பாஜக, இங்கே குடியிருப்போருக்கு இடங்க ளைச் சொந்தமாக்குவோம் என உறுதி அளித்தி ருந்தது. ஆயினும் இவர்கள் வாக்குறுதிகள் வெறும் ஜூம்லாக்கள் (வெற்று வாக்குறுதிகள்) என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.  இவ்வாறு அப்புறப்படுத்தும் தில்லி காவல் துறையினரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கடு மையாகக் கண்டனம் செய்கிறது. மிகவும் வறிய நிலையில் வாழும் அந்த ஏழை மக்களுக்கு நிரந்தரமாகக் குடியிருப்புகள் வழங்கிட வேண்டும். அங்கே இதுநாள்வரையிலும் வாழ்ந்துவந்தவர்களின் குழந்தைகளின் பாதிக்கப்படாதவாறு கல்வியைத் தொடரவும், வேலைவாய்ப்புகளை அளிக்கவும் உத்தர வாதம் செய்திட வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 140 குடியிருப்போர் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டு நான்கு போலீஸ் வேன்க ளில் அடைத்து நரேலா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப் பட்டிருப்பவர்களில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கரு மலையான், தில்லி மாநில செயலாளர் அனுராக் சாக்சனா முதலானவர்களும் அடங்குவர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்கள் விரோ தக் கொள்கைகளுக்கு எதிராக எங்கள் போ ராட்டம் தொடரும்” என அதில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)

அநீதிக்கு எதிரான போராட்டம்  தொடரும்: விஜு கிருஷ்ணன்

தில்லி காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விஜு கிருஷ் ணன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக தனது முகநூல் பதிவில்,”தில்லி காவல் துறையின் மிருகத்தனமான செய லுக்கு கடும் கண்டனம். மதராஸி கேம்பில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் 360 குடும்பங்கள் திடீரென, அநியாயமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்ற உத்தரவுகளுக்கு எதி ராக அமைதியாக போராடிய போது, தில்லி காவல்துறையினர் மிருகத்தனமான பலத்தை காட்டியுள்ளனர். குறிப்பாக பெண் கள் மீது ஆண் காவல்துறையினர் முறைதவறி நடந்து கொண்டனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. முறையான மாற்று வசதி இல்லாமல் குடியிருப்பாளர்கள் (தமிழர்கள்) வெளியேற்றப்படு கிறார்கள். மாற்று இடம் வெகு தொலைவில் உள்ளது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.  போராட்டக்களத்தில் தில்லி காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் ஆர்.கரு மலையான், தில்லி மாநிலச் செய லாளர் அனுராக் சக்சேனா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுபீர் பானர்ஜி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாநில செய லாளர் அமன், மாநில தலைவர் ரிக்தா மற்றும் சிபிஎம், சிஐடியு, வாலிபர் சங்க ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மக்களின் குரலை அடக்க முயற்சிக்கும் பாஜக அரசு, அடக்குமுறை மூலம் எதிர்ப்புகளை சிதைக்க முயல்கிறது. ஆனால், மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட தீர்மானித்துள்ளனர்.

கோரிக்கை

அவசர வெளியேற்ற உத்தரவு களை தில்லி அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முழுமை யான மாற்று வசதி வழங்கப்படும் வரை குடியிருப்புகளை இடிப் பதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரும் உட னடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஆனாலும் அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும். மக்கள் போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள்” என விஜூ கிருஷ்ணன் கூறியுள்ளார்.