புதுதில்லி, டிச.4- நடப்பு 2021-22 ஆம் நிதி யாண்டில் ரூ. 3 லட்சத்து 73 லட்சம் கோடிக்கான கூடுதல் மானியம் கோரும் மசோதாவை மக்களவை யில் ஒன்றிய அரசு தாக்கல் செய் தது. உரங்களுக்கான கூடுதல் மானி யமாக ரூ. 58 ஆயிரத்து 430 கோடி, நிலுவையில் உள்ள ஏற்றுமதி ஊக் கத்தொகையை வழங்க ரூ. 53 ஆயிரத்து 123 கோடி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதிக்கு ரூ. 22 ஆயிரத்து 039 கோடி, உணவு - பொது விநியோகத் துறைக்கு ரூ. 49 ஆயிரத்து 805 கோடி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வா்த்தகத் துறைக்கு ரூ. 2 ஆயிரத்து 400 கோடி, பாதுகாப்புத் துறைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி, உள்துறைக்கு ரூ.4 ஆயிரம் கோடி, நகா்ப்புற வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்துவதற்காக ரூ. 14 ஆயி ரம் கோடி, எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத் துக்காக ரூ. ஆயிரத்து 153 கோடி என இந்த கூடுதல் மானியத்தை அரசு கோரியுள்ளது.
இதற்கான மசோதாவை மக்க ளவையில் ஒன்றிய அரசின் நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்ரியும், மாநிலங்களவையில் நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளனர். இதில் முக்கியமானது, கூடுதல் மானியமாக கோரப்படும் ரூ. 3 லட்சத்து 73 ஆயிரம் கோடியில், ‘ஏர் இந்தியா’ கடன்களை அடைப் பதற்காக மட்டும் ரூ. 62 ஆயிரத்து 57 கோடி கேட்கப்பட்டுள்ளது. கடன்களை அடைக்க முடியா மல்தான் ‘ஏர் இந்தியா’வை விற்ப தாக மோடி அரசு கூறியது.
ஆனால், இப்போது ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு விற்ற பிறகும், கடன் களை அடைப்பதற்கு மக்களின் வரிப்பணத்தில் ரூ. 62 ஆயிரம் கோடி யை கேட்டுள்ளது. இதன்மூலம் ‘ஏர் இந்தியா’வை விற்பது மட்டுமே மோடி அரசின் நோக்கமாக இருந் துள்ளதே தவிர, கடன்கள் முக்கி யப் பிரச்சனை அல்ல என்பது நிரூபணமாகியுள்ளது. கடன் களுக்கு 62 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க முடியும்போது, கூடுதலாக 18 ஆயிரம் கோடி ஒதுக்கி ‘ஏர் இந்தியா’வை அரசே நடத்தியிருக்க முடியாதா? என்ற கேள்வியையும் இது எழுப்பி யுள்ளது.