states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்

ஒன்றிய பாஜக அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய அணுகுமுறைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் - பாஜகவின் இந்துத்துவா கொள்கையில் இருந்து மக்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி

நிதிஷ் குமார் அவர்களே! இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை நாள்தோறும் அவமதிக்கிறீர்கள். குறைந்தபட்சம் தேசிய கீதத்தையாவது அவமதிக்காமல் இருங்கள். சில நொடிகள் கூட நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிலையாக இல்லை. நீங்கள் மயக்க நிலையில் இருப்பது பீகார் மாநிலத்துக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

கணக்கு காட்டப்படாத பெரும் பணக் குவியல் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த சத்தமுமின்றி நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். முழுமையான விசாரணையும் உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டாமா? நீதிபதிகளுக்கு சட்டம் வேலை செய்யாதா?

ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா

அமைத்தவுடன் ஒவ்வொரு பெண்ணும் ரூ.2,500 பெறுவார்கள் என்றும், ஹோலி அன்று இலவச சிலிண்டர்கள் வழங்குவோம் என பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார்.