ஒடிசா முழு அடைப்பு போராட்டத்தில் சிபிஎம்
பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டித்து வியாழனன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகள் இணைந்து முழுஅடைப்பு போராட்டத்தை நடத்தின. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம், காங்கிரஸ் ஊழியர்கள் பேரணியாகச் சென்றனர்.