states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன்

மான் கி பாத்! பிற்பகல் 4 மணிக்கு பிறகு 7 மணிக்குள் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் குடியரசு துணைத்தலைவர் ராஜினாமா செய்தார். அவருக்கு மரபார்ந்த வழியனுப்பு நிகழ்வு நடத்த முடியவில்லை. காரணம், அவருக்கு பேசக்கிடைக்கும் வாய்ப்பை ஆளுங்கட்சி விரும்பவில்லை. தனது சொந்த பிரதிநிதியின் பேச்சைக் கண்டு பயங்கொள்ளுகிற அரசை இந்தியா முதல்முறை பார்க்கிறது.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

மக்கள் நலன் பற்றி பேச வேண்டிய இடம் சட்டமன்றம் ஆகும். ஆனால் பீகார் சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எனது தாய் மற்றும் சகோதரிகளை அவமதித்தனர். பாஜக-ஆர்எஸ்எஸ்-ஸின் இந்த இழிவான செயல் அருவருப்பானது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையமும், மோடி அரசாங்கமும் ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருக்கின்றன. அதிகாரிகள் வாக்காளர் வீடுகளுக்கு செல்லாமல் படிவங்களை நிரப்புகிறார்கள். நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்

பீகார் மக்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையை வேண்டுமென்றே ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். தமிழ்நாடு இந்த அநீதிக்கு எதிராக உறுதியாக நிற்கும். போராடும்.