states

img

கேரளாவில் சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

கேரள மாநிலத்தின் பாலக்காடு தொகுதி எல்டிஎப் வேட்பாளர் டாக்டர். பி. சரின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பாலன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டக்குழு, டெபாசிட் தொகை செலுத்தியது. அதேபோல சேலக்கரா சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் எல்டிஎப் வேட்பாளர் யு.ஆர்.பிரதீப் அக்.23 புதனன்று வேட்புமனு தாக்கல் செய்தார். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன் எம்.பி., சி.பி.ஐ., மாவட்டச் செயலர் கே.கே.வத்சராஜ் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். முன்னதாக நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்டோர் பேசினர்.