states

பேருந்தில் தீ விபத்து: 20 பேர் பலி

பேருந்தில் தீ விபத்து: 20 பேர் பலி

ராஜஸ்​​தான் மாநிலத்தில் பயணி கள் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி  20க்கும் மேற் பட்டோர் பலியாகியுள்ளனர். செவ்வாயன்று பிற்​பகல் ராஜஸ்​​தானின் ஜெய்​சால்​மரிலிருந்து ஜோத்​பூர் நகரை நோக்கி தனி​யார் பேருந்து ஒன்று 57 பயணி​களு​டன் புறப்​பட்டது. ஒரு சில மணி நேரத்தில் அந்​தப் பேருந்​தின் பின்புறத்தில் திடீரென தீப்​பற்றி பேருந்து முழு​வதும் வேகமாகபரவி​யது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயி​ரிழந்​தனர். மேலும் 15 பயணி​கள் கடு மை​யான தீக்​கா​யங்​களு​டன் மருத்து​வ​மனை​யில் சிகிச்சைப் பெற்று வரு​கின்​றனர். பதற்றத்தில் பயணி​களால் அவ சரமாக வெளி​யேற முடி​யாமல் போன நிலையில் அவர்கள் தீயில் சிக்கி இருக்க லாம் எனக் கூறப்படுகிறது.  ராஜஸ்​தான் முதல்​வர் பஜன்​லால் சர்​மா, பேருந்து விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு இரங்கல் தெரி​வித்​துள்ளது டன், காயமடைந்​தவர்​களுக்கு உரிய சிகிச்​சை அளிக்​க அதி​காரி​களுக்​கு உத்​தரவிட்டுள் ளார்​. உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள் ளார். மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்க ளின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.