புதுதில்லி, பிப்.1- நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜனவரி 31 அன்று தொடங்கியது. 2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 செவ்வாயன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- வரும் ஆண்டில் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடி என்றும், வரவு ரூ. 22.8 லட்சம் கோடியாக இருக்கு என்றும் அரசின் நிதி பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 6.4 சதவீதம் என குறையுமென்றும் அறிவிப்பு.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 9.27 சதவீதமாக இருக்கும் என கணிப்பு.
- ஒன்றிய அரசின் மூலதன செலவுகள் ரூ.10.68 லட்சம் கோடியாக அதிகரிப்பு
- நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ‘ஒரே நாடு ஒரே பதிவு’ முறை.
- நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம்
- 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் இணைப்பு.
- 75 மாவட்டங்களில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட்.
- 2025 ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களுக்கு இணைய வசதி.
- மாநிலங்களுக்கு உதவ 3 ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை.
- ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடக்கம்
- ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்
- அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் ஒதுக்கீடு.
- பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30 சதவீத வரி விதிப்பு
- வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை. ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பண பரிமாற்றம் முறை அறிமுகம்
- வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- 1-12 ஆம் வகுப்புக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்து வதற்காக 200 டிவி சேனல்கள் அறிமுகம் பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்விமுறை அறிமுகம்.
- டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.
- நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தல்.
- சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை.
- ரூ.60 ஆயிரம் கோடியில் 18 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை.
- பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியாக சிகிச்சையளிக்க மையங்கள்.
- ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
- இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம்.
- கோதாவரி- பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை .
- வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில் 22 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் . போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை.
- 2023-க்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
- தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது .
- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை
- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்.
- கூட்டுறவு அமைப்புகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15 சதவீதமாக குறைப்பு
- பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30 சதவீத வரி விதிப்பு.
- அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்.
- விரைவுச் சாலைகளுக்கான பிரதமர் கதிசக்தி மாஸ்டர் திட்டம் அடுத்த நிதியாண்டில் வகுக்கப்படும்.
- ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை அறிவிப்பு
- உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68 சதவீதம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை.
- ஒவ்வொரு வீட்டிற்கும் தூய்மையான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்த 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- சோலார் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.