states

img

தோல்விகளை ஒப்புக்கொள்வதற்கு ஒன்றிய பாஜக அரசு மறுக்கிறது...

லக்னோ, பிப்.14- வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார விவகாரங்களில் ஒன் றிய பாஜக அரசு, தனது தோல்வி களை ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்று, உ.பி. முன்னாள் முதல்வ ரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலை வருமான மாயாவதி குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்ப தாவது: வேலையின்மை என்பது தேசியப் பிரச்சனையாக உருவெ டுத்துள்ளது. ஆனால், நாடாளுமன் றத்தில் இதனை ஏற்றுக்கொள்ள பாஜக மறுத்து வருகிறது. தங்களு டைய தவறு என்று தெரிந்தும் அதனை ஏற்க மறுத்து தொடா்ந்து ஆணவப் போக்குடன் அரசு செயல் படுகிறது.  வேலையின்மையால் ஏராள மான இளைஞா்கள் சமூகத்தில் பல்வேறு அவமரியாதைகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் பல்வேறு  பகுதிகளில் கடன் சுமையால் விவ சாயிகள், சிறு தொழில் நடத்துவோர் தற்கொலை செய்து கொள்வதாக வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. நாட்டில் உள்ள இளைஞா்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் ஏதோ ஒரு பொருளாதார பிரச்சனைகளால் அழுத்தத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், நாடு பொருளாதார ரீதி யாக வளா்ந்து விட்டதாகவும், இந்தியா ஒளிர்வதாகவும் பாஜக பிரச்சாரம் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இவ்வாறு மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.