states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

பத்து லட்சத்துக்கும் அதிகமாக உள்ள ஆஷா (ASHA) ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு கவுரவம்! இதற்கு முழு தகுதி படைத்தவர்கள் ஆஷா  ஊழியர்கள். “கிராமப்புற வறுமையில் உள்ள மக்கள் ஆரம்ப சுகாதார சேவைகளை பெறுவதை உத்தரவாதம்” செய்த பணிக்காக இந்த கவுரவம்! ஆனால் அவர்களை இழிவுபடுத்தும் நிலை முடிவுக்கு வர வேண்டும். மோடி அரசாங்கம் உடனடியாக செயல்பட்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பெட்ரோல்/டீசல் மீது வரி குறைப்பு பற்றிய மோடி அரசின் வாய்ஜாலமும் பொய்களும் எடுபடாது! 2014 ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல் மீது 250 சதவீதம்/ டீசல் மீது 900 சதவீதத்திற்கும் அதிகமாக வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கொடுமையான வரி உயர்வுகளை முழுவதுமாக திரும்பப் பெற்றால்தான் நிவாரணம் கிடைக்கும். பண மதிப்பு நீக்கம்/ஜி.எஸ்.டி/ வரி உயர்வுகள் நமது பொருளாதாரத்தை அழித்துவிட்டது.

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury