பிரேசிலியா,அக்.4- கடும் வறட்சி மற்றும் வெப்பத் தின் காரணமாக கடந்த வாரம் பிரேசில் அமேசானின் கிளை நதி யில் 100க்கும் மேற்பட்ட டால்பின் கள் இறந்து மிதந்தன. மேலும் அந் நாட்டின் டீபே ஏரியின் வெப்பநிலை சராசரி அளவை விட 10 டிகிரி உயர்ந்ததால் (39 டிகிரி) அங்கும் டால்பின்கள் இறந்து மிதந்தன. தென் அமெரிக்காவின் ஆறுக ளில் மட்டுமே காணப்படும் அமே சான் நன்னீர் டால்பின்கள் அழிந்து வரும் உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் உள்ளன.கிளை நதி யில் 900 மற்றும் ஏரியில் 500 டால்பின்கள் இருந்த நிலையில் தற்போது 10 சதவீதம் வரை அழிந்துவிட்டன. இவற்றின் மெதுவான இனப் பெருக்க சுழற்சியும் தற்போது இந்த இனத்தை தீவிரமாக அழிவு பாதையில் தள்ளியுள்ளது.