states

img

அக்.7இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

அக்.7இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

வழக்கமாக நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் நடைபெறும். இந்த ஆண்டு பீகார் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள தால், குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி உறுதியாக இன்னும் அறிவிக்கவில்லை.  இத்தகைய சூழலில், வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு ஒருநாள் முன்பாகவே அனைத்துக் கட்சி  கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் நடத்துவது உண்டு. ஆனால் இந்த முறை கூட்டத் தொடர் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்பாகவே புதிய குடியரசு துணை தலைவரான சி.பி.ராதா கிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இது  நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொட ருக்கான அனைத்துக் கட்சி கூட்டம் என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை. எனினும் அக்டோபர் 7ஆம் தேதி மாலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.