states

தமிழக முதல்வருக்கு விமானப்படை நன்றி தெரிவிப்பு

புதுதில்லி,டிச.11- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மீட்புப் பணிகளுக்காக உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.  குன்னூர் அருகே காட்டேரியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உதவிய நீலகிரி ஆட்சியர், காவல்துறையினர், காட்டேரி கிராம மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உட்பட 13 பேர் பலியாகினர்.