states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி

ஈரான் நாட்டின் 4 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க அரசியலமைப்பையும் மீறுவதாக உள்ளது.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

ஒரு சில ஆதிக்கவாதிகள் அணு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லி, ஒரு நாட்டை குண்டுவீச்சால் தரைமட்டமாக்கிய பிறகு, இப்போது சமாதானம் பேசுகிறார்கள். உலகம் இதை முன்பும் பார்த்திருக்கிறது. இராக்கில் அழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் சொல்லி, எதுவும் கிடைக்காத போதும் அந்நாட்டைத் தாக்கி நிரந்தரமாக சீர்குலைக்கப்பட்டது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும். எளியவர்களுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளும், திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி

நான் தீவிர அரசியலில் நுழைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது போலியான செய்தி ஆகும். அதே சமயத்தில் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க எவ்வித தயக்கமும் எனக்கு இல்லை.