states

img

காங்கிரஸ் வேட்பாளரைக் ‘களவாடிய’ பாஜக கூட்டணியிலுள்ள அப்னா தள்

லக்னோ, ஜன.25- காங்கிரஸ் நிறுத்திய முஸ் லிம் வேட்பாளரை, தன்பக்கம் இழுத்து அவரையே தனது கட்சியின் வேட்பாளராக பாஜக கூட்டணியிலுள்ள அப்னா தள் (எஸ்) கட்சி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச சட்டப் பேரவை தேர்தலுக்கான, காங் கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி கட்சிகளின் வேட்பாளர்  பட்டியலில் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் இரட்டை இலக்கத் தில் இருக்கும் நிலையில், பாஜகவோ அதன் கூட்டணிக் கட்சிகளோ முஸ்லிம் ஒருவ ருக்குக் கூட வாய்ப்பு தரவில்லை. 2014 மக்களவைத் தேர்தல் துவங்கி, 2017 சட்டமன்றத் தேர்தல், மீண்டும் 2019 மக்கள வைத் தேர்தல் ஆகியவற்றிலும் இதுதான் நிலைமை. இந்நிலையில், சூயர் தொகு தியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹைதர் அலி கான் (36) என்பவரை,

பாஜக கூட்டணியிலுள்ள அனுப்பிரியா  படேல் தலைமையிலான அப்னா தள் (எஸ்) கட்சி தனது வேட்பா ளராக மாற்றிக் கொண்டதன் மூலம், உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக, பாஜக கூட்டணியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இடம்பெற் றுள்ளார். ஹைதர் அலி கான், ராம்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வர் ஆவார். இவரின் தந்தை நவாப் காசிம் அலி கான், 4 முறை எம்எல்ஏ-வாக இருந்த வர். காசிம் அலி கான், கடந்த 2017 தேர்தலில் சூயர் தொகுதி யில் பகுஜன் சமாஜ் வேட்பாள ராக களமிறங்கி சமாஜ்வாதி வேட்பாளரிடம் தோல்வியடைந் தார். அவரது மகனான ஹைதர் அலி, இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். இவரின் தாத்தா நூர் பனோ புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவ ராக இருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது. அதனாலேயே காங்கி ரஸ் ஹைதர் அலி கானுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தது. ஆனால், அவர் பாஜக கூட்ட ணியிலுள்ள அப்னா தள் கட்சிக் குத் தாவியுள்ளார்.