ஒட்டன்சத்திரம், ஜூலை 3- ஒட்டன்சத்திரத்தில் அருந்ததியர் மக்கள் பயன்படுத்திய மயானத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அருந்ததி யர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நாகணம் பட்டி ஏ.பி.பி.காலனி. பெரியாஞ்செட்டியபட்டி, கே. கே. நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி அருகே கிராம புல எண் 380ல் உள்ள நிலத்தை 50 ஆண்டு களுக்கு மேலாக மயானமாகப் பயன்படுத்தி வந்தனர்.
லக்கையன்கோட்டை முதல் பழனி வரை தேசிய நெடுஞ்சா லைத்துறை புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலத்தைக் கையகப்படுத்தியது. இதில் மீதியுள்ள இடத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் மயானத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக வேலி அமைத்துள்ளனர். இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்யவும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட் டோர் நல ஆணையத்திற்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதனை யடுத்து பழனி வருவாய்க் கோட்டாட்சியர், தாழ்த்தப்பட்ட மக்கள் பொது மயானத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி கடந்த ஜூன் 23- அன்று இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளார். அப்போது அருந்ததியர் மக்களை அழைக்கவில்லை. மயானப் பிரச்சனையில் பட்டியலின மக்களுக்கான உரிமையை மறுத்ததோடு சாதி ஆதிக்க மனோபாவமுள்ளவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, தீண்டா மை வன்கொடுமைச் செயலாகும் சாதி ஆதிக்க மனோபாவ சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து தீண்டாமை வேலியை அகற்ற மறுக்கும் வட்டாட்சியர் முத்துச்சாமி மற்றும் சாதி ஆதிக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானத்தை தாங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென அருந்ததியர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.