states

img

மோடியின் 8 ஆண்டு ஆட்சியில் சுகாதாரத்திற்கான செலவினம் குறைப்பு!

புதுதில்லி, செப். 13 - நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்களின் சுகாதாரத்திற்கான செலவினம் கணிசமாக குறைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஒன்றிய அரசின் தேசிய சுகாதார மதிப்பீடு தொடர்பான அறிக்கை திங்க ளன்று வெளியானது. இதன்படி 2017-18 நிதியாண்டில் நாட்டின் சுகாதாரத்துறைக் கான செலவினம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 1.35 சதவீத மாக இருந்தது, 2018-19 நிதியாண்டில் 1.28 சதவிகிதமாக சரிந்துள்ளது. அதேபோல 2018-19ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த அரசு சுகாதார செல வினத்திலும் ஒன்றிய அரசின் பங்கு வெகு வாக குறைந்துள்ளது. 2017-18 நிதியாண்டில், ஒட்டுமொத்த சுகாதார செலவினத்தில் ஒன்றிய அரசின் பங்கு 40.8 சதவிகிதமாக இருந்தது.

இது 2018-19 நிதியாண்டில் 34.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், சுகாதாரத்திற்கான மாநில அரசுகளின் பங்கு 59.2 சதவிகிதத்திலிருந்து 65.7 சத விகிதமாக உயர்ந்துள்ளது. மொத்த சுகாதார செலவினத்தைப் பொறுத்தவரை, 2018-19 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில், 3.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அரசு மற்றும் தனியார் முதலான ஒட்டு மொத்த சுகாதாரத் துறைக்கான செல வினம் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  2013-14இல் 4 சதவிகிதமாக இருந்தது. இது 2017-18 இல் 3.3 சதவிகிதமாகும், அதைத் தொடர்ந்து 2018-19-இல் 3.2 சதவிகித மாகவும் குறைந்துள்ளது. 2013-14 நிதியாண்டில் ஒரு தனி நபரின் சுகாதார செலவினம் ரூ. 3  ஆயிரத்து 638 ஆக இருந்தது. இது  2017 - 18 நிதியாண்டில், ரூ. 4 ஆயிரத்து 297 ஆகவும், 2018-19 நிதியாண்டில் ரூ. 4  ஆயிரத்து 470 ஆகவும் அதிகரித்துள் ளது. 2013-14 இல் சுகாதாரச் செலவினங் களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டச் செலவினம் 6 சதவிகிதமாக இருந்தது, 2018-2019 நிதியாண்டில் 9.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் சுகா தாரத்திற்கான செலவினம் மட்டும், மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டு முதல் குறைந்துகொண்டே வருகிறது.

;