பேராசிரியர் பணியிடங்களுக்கு 6 பரிந்துரைக் கடிதங்கள் கட்டாயம்
முனைவர் பட்டம் முடித்த எஸ்சி/எஸ்டி, பி.சி., மாணவர்களுக்கு புதிய நெருக்கடி
புதுதில்லி இந்திய கல்வி நிறுவனங்க ளில் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண் ணப்பிக்க முனைவர் பட்டம் மட்டும் பெற்றிருந்தால் போதாது. பரிந்துரைக் கடிதங்களும் வேண்டும் என்ற நிலை உருவாகி யுள்ளது. இதனால் முதல் தலைமுறை யாக முனைவர் பட்டம் பெற்றுள்ள மாணவர்களுக்கும், எஸ்சி/எஸ்டி, பிற்படுத்தப்பட்ட, சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஐஐஎஸ்இஆர் போபால் வெளியிட்ட உதவிப் பேராசிரியர் பணி விளம்பரத்தில், “குறைந்த பட்சம் ஆறு பரிந்துரை யாளர்களிடமிருந்து கடிதம் வேண்டும். பரிந்துரை செய்ப வர்கள் இணைப் பேராசிரியர் அல்லது பேராசிரியராக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் முனைவர் ஆய்வு மாணவர்கள் மற்றும் முதுநிலை முனைவர் ஆய்வு மாணவர்களின் ஆலோச கர்களாகவும் இருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. பரிந்துரைக் கடிதம் எனும் புதிய தடை இந்த வேலை விண்ணப்ப நடைமுறையானது பல்வேறு தடை களை கடந்து கல்வி பெற்று சமூ கத்தில் முன்னேறும் நிலைக்கு வந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு மீண்டும் ஒரு புதிய தடையாகவே உள்ளது. சமீப காலமாக இந்தியப் பல்க லைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் மாண வர்கள், ஆசிரியர்கள் சாதிப் பாகு பாட்டுடன் தொடர்ந்து புறக்க ணிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நடைமுறையும் இந்தியாவின் சாதியமைப்பு மற்றும் சமூக செல்வாக்கு, ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுகிற நடவடிக்கையாகும். இந்த பரிந்துரைக்கடிதம் கொ டுக்கும் முறையானது சாதி அடிப்படையிலான வேலைகள் கொடுக்கப்பட்ட காலத்தில் இருந்த நடைமுறை. இந்த நடைமுறை காரணமாக சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்களின் உற வினர்கள், சாதிக்காரர்கள் மட்டுமே கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற வழி கிடைத்தது. தலித், பழங்குடி, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கி இருந்த சமூகத்தினருக்கு அத்தகைய பரிந்துரைக் கடிதங்களை தர ஆளில்லாமல் இருந்ததால், அவர் கள் நல்ல சம்பளம் தரும் வேலை களில் இருந்து விலக்கி வைக்கப் பட்டனர். அதையே தற்போதும் நடைமுறையில் திணித்து வரு கின்றனர் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகுதிகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் விண்ணப்பம் செய்யும் நிறுவனத்தின் வளர்ச் சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் போன்றவற்றிற்காக பல மணிநேரம் செலவழித்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பிய பிறகு அதனை சமர்ப்பிக்கும் முன் கேட்கப்படும் பரிந்துரைக் கடித எண்ணிக்கை பட்டியலைக் கண்ட தும் விண்ணப்பிக்கும் மாணவர்க ளுக்கு தயக்கம் ஏற்படுவதாக வும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். கடந்த காலங்களிலும் இந்த பரிந்துரைக் கடிதங்கள் வழங்கு வது வழக்கமான நடைமுறையாக இருந்துள்ளது. ஆனால் அது முனைவர் படிப்பு சேர்க்கை மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு இரண்டு பரிந்துரைக் கடிதங்கள் வேண்டும் என்ற நடைமுறையாக இருந்தது. தற்போது பல அரசு நிதியுதவி பெறக்கூடிய மத்திய கல்வி நிறுவனங்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்து ரைக் கடிதங்களாக அதிகரித்துள் ளன எனவும் கூறப்பட்டுள்ளது.