பிரபல மருத்துவ ஆய்வு இத ழான பிஎம்ஜே மற்றும் ஜெர் மனியின் மேக்ஸ் பிளாங்க் வேதியியல் ஆய்வு நிறுவனம் இணைந்து திறந்தவெளிக் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன. அதன்படி, “தொழிற்சாலைகள், மின்னாற்றல் உற்பத்தி மையங்கள், புதைபடிவ எரிபொருள்களால் (பெட்ரோல், டீசல்) மட்டும் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் உயிரி ழக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் காற்று மாசுபாட்டால் ஆண் டுக்கு 21.8 லட்சம் பேர் உயிரிழக்கின் றனர்” என ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது. மேலும், “இயற்கையாக உரு வாகும் காட்டுத் தீ, பாலைவன துகள்கள் ஆகியவற்றைத் தவிர்த்து மனிதர்களால் கண்டறியப்பட்ட எரிபொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினாலே 82 சதவீத உயி ரிழப்புகளைத் தவிர்க்க இயலும். கடந்த 2019-இல் பெறப்பட்ட தரவு களின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய் வில் உலகம் முழுவதும் 83 லட்சம் பேர் புதுப்பிக்க இயலாத எரி பொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் காற்று மாசு என்பது 61 சதவீதம் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன” என்று குறிப்பிடும் அறிக்கையில் முக்கிய அறிவுரைகளும் கூறப்பட்டுள்ளன. அதிகரிக்கும் நோய் பாதிப்பு மரணங்கள் பிஎம்ஜே ஆய்வில், “திறந்த வெளிக் காற்று மாசுபாட்டால் ஆஸ்துமா முக்கிய நோயாக இருந்த நிலையில், இருதய நோய்கள், மாரடைப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படுகின்றன. இதன்காரணமாகவே அதிக உயிரி ழப்புகள் ஏற்படுகின்றன” என்றும் கூறப்பட்டுள்ளது.