சென்னை, மார்ச் 23- கிருஷ்ணகிரி ஜெகன் படுகொ லைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் எஸ். கார்த்திக், மாநில செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், கிட் டாம்பட்டியை சேர்ந்த ஜெகன் (26) சில மாதங்களுக்கு முன்பு ஆவாதா னாப்பட்டியை சேர்ந்த சரண்யாவை (21) காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாத சரண்யாவின் தந்தை சங்கர் அவருடன் மேலும் இரண்டு பேரை சேர்த்துக்கொண்டு ஜெகனை வழி மறித்து சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்த வர்கள். இருப்பினும் இருவரும் சுய மாக விரும்பி காதல் திருமணம் செய்த காரணத்தாலும், தன்னைவிட அந்தஸ்தில் குறைந்த ஒருவரை மாப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தாலும் பெண்ணின் தந்தையே மருமகனை வெட்டி படுகொலை செய்திருப்பது வெட்கக்கேடானது, மனிதாபிமானமற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு இந்த ஆணவப்படுகொலையை வன்மை யாக கண்டிக்கிறது. படுகொலையில் ஈடுபட்ட அனை வரையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஜெகனின் மனைவி சரண்யாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ஜெகனின் குடும்பத் திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட் டில் தொடர்ந்து சாதியின் பெயராலும், குடும்ப கௌரவத்தின் பெயராலும் நிகழ்ந்து வரும் ஆணவப்படுகொலை களை தடுக்க தனிச் சட்டத்தை உட னடியாக இயற்ற வேண்டும்.தமிழ்நாடு அரசு விரைவாகவும், தீவிரமாகவும் இந்த பிரச்சனையின் மீது தலையிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.