states

‘பெமல்’ நிறுவனத்தை விற்பதில் ஒன்றிய அரசு பிடிவாதம்

ரூ.50,000 கோடி சொத்தை ரூ. 2,000 கோடிக்கு விற்கும் மோடி அரசு?

பெமலுக்கு நாடு முழுவதும் ரூ. 50,000 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. இதில் 26 சதவிகித பங்கு ( ஒரு பங்கின் விலை ரூ. 1,855 என்ற அடிப்படையில் 1.10 கோடி பங்குகள்) இரண்டாயிரம் கோடி  ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. ஒன்றிய அரசின் 54 சதவிகித பங்கில் இருந்து, இந்த 26 சதவிகிதம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 46 சதவிகித பங்குகளை எல்ஐசி போன்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் வைத்துள்ளன. இந்நிலையில், பெமல் பங்குகளை பரிமாற்றம் செய்வதற்கான டெண்டரில் மேலாண்மை அதிகாரம்  உட்பட இடம்பெற்றுள்ளது. இதனால், இந்த விற்பனை மூலம் நிலம், இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் தனி யாருக்கு மாற்றப்படும். இவற்றுடன் நாட்டின் முக்கிய நகரங்களில் பெமலுக்குச் சொந்தமான 3,675 ஏக்கர் நிலத்தை யும் தனியார் நிறுவனம் கைப்பற்றும்.  பெமல் நிறுவனம், கடந்த ஆண்டு ரூ. 203 கோடி லாபத்துடன், ரூ. 4,000 கோடிக்கு வர்த்தகம் செய்த பெமல், ரூ. 10,000 கோடிக்கான ஆர்டரையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கஞ்சிக்கோடு, ஜூலை 17 - பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்’ (பெமல்) நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய, ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், அதற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் 915  நாட்களை எட்டியுள்ளது. கேரள மாநிலம், கஞ்சிக்கோட்டில் உள்ள ‘பெமல்’ நிறுவனம்,        பாதுகாப்பு அமைச்ச கத்தின் கீழ் உள்ளதாகும். இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இராணுவத்திற்கான வாகனங்கள் மற்றும் மெட்ரோ ரயில்  பெட்டி களை உற்பத்தி செய்கிறது. அவ்வாறிருக்க, ‘பெமல்’ நிறுவனத்தை விற்பனை செய்வது, தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று விற் பனை நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஆனாலும், டெண்டரில் பங்கேற்ற 12 நிறு வனங்களில் மூன்று நிறுவனங்களை  அரசு தேர்வு  செய்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இண்டஸ்ட்ரீஸ், மும்பையைச் சேர்ந்த கல்யாணி குழுமம் மற்றும் ரஷ்ய நிறுவனம் ஆகியவை பெமலை கையகப்படுத்துவதற்கான தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, பெமலை விற்றே தீருவது என்ற தீவிரத்தில் ஒன்றிய அரசு உள்ளது. ஆனால், இதற்கு எதிராக பெமல் ஊழியர் சங்கம், நிறு வன செயல்பாடுகளை பாதிக்காத வகையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வரு கிறது. சிஐடியு தலைமையிலான குழு வேலை நிறுத்தத்திற்கு உதவுகிறது. இந்தப் போராட்டம் தற்போது 915 நாட்களை எட்டியுள்ளது. ஒன்றிய அரசின் பிடிவாதத்து க்கு எதிராக தொழிலாளர்கள் இவ்வளவு உறுதி யான போராட்டத்தை நடத்திவரும் நிலையில், பாலக் காடு எம்.பி. வி.கே. ஸ்ரீகாந்தன் நிறுவனத்தைப் பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை; தொழிலாளர்களை எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.