சாதிய அடக்குமுறை எங்கு இருந்தாலும், அது ஒழிக்கப்பட வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை,ஜூலை 3- எந்தக் கட்சிக்குள் சாதிய அடக்கு முறை இருந்தாலும், அது ஒழிக்கப்பட வேண்டும் என பா.ரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; `மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித்துக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்கு மான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது திமுக. ஆட்சி பொறுப்பேற்கும் போதெல் லாம் சட்டங்களாகவும் திட்டங்க ளாகவும் `சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம். `பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடி வங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிர மாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்ட மும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப் போம். இப்பயணத்தில் திமுக மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டி ருக்கும் ரஞ்சித்துக்கு நன்றி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பச்சை மிளகாய் விலை புதிய உச்சம்: ரூ.100-க்கு விற்பனை
சென்னை,ஜூலை 3- சென்னை கோயம்பேடு மொத்த, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் சீசன் முடிந்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசனில் மட்டுமே தற்போது பச்சை மிளகாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்க ளாக பச்சை மிளகாய் விலை அதிகரித்து வருகிறது. திங்களன்று (ஜூலை 3) மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100-க்கு விற்கப் பட்டது.
3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை,ஜூலை 3- தென்மேற்கு வங்கக் கடல் பகுதி களின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவு கிறது. மேலும், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வருகிற 4, 5, 6 ஆகிய தேதி களில் சில இடங்களில், இடி, மின்னலு டன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது.