சென்னை,ஏப்.1- தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகை யில் தினமும் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. ஈரோடு - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), கரூர் - 104.9 டிகிரி, மதுரை - 102.56 டிகிரி, திருச்சி - 101.3 டிகிரி, தொண்டி - 101.3 டிகிரி, வேலூர் - 101.48 டிகிரி வெயில் கொளுத்தி யது. 99.68 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் - 98.6 டிகிரி, தஞ்சாவூர் - 98.6 டிகிரி நாமக்கல் - 99.5 டிகிரி வெப்ப நிலை பதிவானது.