states

img

ராஜேந்திரன்-பூஞ்சோலையின் மகள் ரா.ஜான்சிராணி, பெ.போஜராஜன்-நிர்மலாவின் மகன் போ.ராஜேஷ் ஆகியோரது திருமண வரவேற்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்கி.ராஜேந்திரன்-பூஞ்சோலையின் மகள் ரா.ஜான்சிராணி, பெ.போஜராஜன்-நிர்மலாவின் மகன் போ.ராஜேஷ் ஆகியோரது திருமண வரவேற்பு விழா புதனன்று (மே 24) பள்ளிக்கரணையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜியிடம், தீக்கதிர் வளர்ச்சி நிதி, நிர்மல் பள்ளி நிதி, வெண்மணி நிதி என தலா 5 ஆயிரம் ரூபாயை ராஜேந்திரன் வழங்கினார். மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), பகுதிச் செயலாளர்கள் ஜெயவேல் (சோழிங்கநல்லூர்), வெங்கடேஷ் (சைதாப்பேட்டை), மாணவர் சங்க மாநிலச் செயலாளர் க.நிருபன்சக்ரவர்த்தி, தீக்கதிர் முன்னாள் பொதுமேலாளர் சி.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.