states

சமூகவலைதளத்தில் சரத் பவாருக்கு மிரட்டல்

மும்பை,ஜூன் 9- தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலை வர் சரத் பவாருக்கு தனது வாட்ஸ் அப்பில் மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளதாக அவ ரது மகளும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே தெரி வித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.  இந்தநிலையில், அவரது மகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் எம்.பி.யுமான சுப்ரியா சுலே செய்தி  நிறுவனத்திடம் கூறுகையில், எனது வாட்ஸ் - அப்பில். சரத் பவார் சாஹேப்புக்கு எதிராக  மிரட்டல் செய்தி வந்துள்ளது. இணையம்  மூலமாக அவருக்கு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. அதனால் நான் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் வந்துள்ளேன். இந்த விவகாரத்தில் மகா ராஷ்டிரா உள்துறை அமைச்சர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சரும் உடனடி யாக தலையிட வேண்டும் என்று வலி யுறுத்துகிறேன். இது போன்ற மலிவான அரசியல் நிறுத்தப்பட வேண்டும். சரத் பவாரின் பாதுகாப்பு பொறுப்பு உள்துறை அமைச்சகத்திடம் இருக்கிறது. உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். சரத் பவார் இந்த நாட்டின் தலைவர். அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக நான் காவல்துறை யிடம்  தெரிவித்துள்ளேன். அவர்கள் நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக் கிறார்கள்” என்று தெரிவித்தார்.