states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. பிரதமர் மோடியின் படைப்பிரிவால் கண்டு பிடிக்கப்பட்ட நகர்ப்புற நக்சல் எனும் முத்திரை முற்றிலும் போலியானது என தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஜி.என்.சாய்பாபா விடுவிக்கப்பட்டதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.  
  2. தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் அமைந்துள்ள ராம்லால் ஆனந்த் கல்லூரியில் டாக்டர் ஜி.என்.சாய்பாபாவை மீண்டும் பேராசிரி யராக நியமிப்பது குறித்து கல்லூரியின் நிர்வாகக் குழு நடவடிக்கை எடுக்கும் என செய்திகள் வெளியாகி யுள்ளது.
  3. இமாச்சலப் பிரதேசத்துடன் இணைந்து குஜராத்  சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட வில்லை. இதனால் பிரதமர் மோடிக்கு மெகா வாக்கு றுதிகள் வழங்க மற்றும் பிரச்சார விழாக்களுக்கு அதிக  நேரம் கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
  4. மாணவி சத்யா கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட சதீஷை அக்டோபர் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளி யன்று மாலை மாணவி சத்யா, அவரது தந்தை மாணிக்கம் ஆகியோரது உடல்கள் தகனம் செய்யப் பட்டது. சத்யாவின் மரணத்தை தாங்க முடியாமல் மாணிக்கம் தற்கொலை செய்துகொண்டார்.
  5. வெள்ளை மாளிகை வன்முறை தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேரில் ஆஜராகுமாறு விசாரணைக் குழு  சம்மன் அனுப்பியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத்ததோடு, வன்முறையை தூண்டிவிட்டதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. வெள்ளை மாளிகையில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெடித்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.
  6. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  7. இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சர் குவாசி குவார்டெங் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  8. உத்தரப் பிரதேசத்தின் பெரோசாபாத், ஆக்ரா, எடாவா மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்குவை  கட்டுப்படுத்த ஒன்றிய அரசு 6 பேர் கொண்ட உயர்மட்ட குழு அனுப்பியுள்ளது.
  9. லெபனானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திடும் வரையில், எல்லைப்பகுதியைத் தீவிரமாகக் கண்காணிக்கப்போவதாக லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பு உறுதியான நிலைப்பாடு எடுத்ததால்தான் சமரசம் இல்லாமல் எல்லைப்பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. லெபனான் மக்கள் ஏற்றுக்கொள்ளும் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
  10. செக் குடியரசின் பணவீக்கம் 18 விழுக்காட்டைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகை யில் பெரும் அளவில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியிருக்கிறது. டிசம்பர் 1993க்குப்பின்னால், இவ்வளவு பெரிய பணவீக்க அதிகரிப்பை செக் குடியரசு கண்டதில்லை. வீட்டுவசதித்துறையே இந்த பணவீக்கம் அதிகரித்ததற்குக் காரணம் என்றும் அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
  11. முதியோருக்கான மருத்துவ செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதைக் கண்டித்து ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி டோக்கியோவின் ஒரு பகுதியான சுகாமோவில் போராட்டம் நடத்தியுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 75 வயதைக் கடந்து, குறிப்பிட்ட அளவிலான வருமானம் இருந்தால் அவர்களின் மருத்துவச் செலவு இரட்டிப்பாகியுள்ளது. இந்தக் கட்டண உயர்வால் 37 லட்சம் மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.
;