states

ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவர் மரணம்!

லக்னோ, செப்.27- உத்தரப்பிரதேச மாநிலத் தில், பள்ளி ஆசிரியர் தாக்கிய தில் பத்தாம் வகுப்பு தலித் மாண வன் உயிரிழந்த அதிர்ச்சி சம்ப வம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தின் வை ஷோலி கிராமத்தைச் சேர்ந்தவர் நிகித் குமார் டோக்ரே (15). தலித்  வகுப்பைச் சேர்ந்த இவர், அச்  சால்டாவிலுள்ள ஆதர்ஷ் இண்  டர் கல்லூரியில் 10-ஆம் வகுப்பு  பயின்று வந்தார். இங்கு செப்டம்பர் 7-ஆம் தேதி சமூக அறிவியல் பாட ஆசி ரியர் அஷ்வினி சிங் (28), செப் டம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் திருத்தப்பட்ட விடைத் தாள்களை வழங்கியுள்ளார். அப்போது, நிகித் குமார், ஓஎம்ஆர் தேர்வுத் தாளில் விடையை தேர்வு செய்வதில் தவறு செய்தி ருந்ததாகவும், அதேபோல், ஏதோ ஒரு வார்த்தையை பிழையாக எழுதியிருந்ததாகவும் கூறப்படு கிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அஸ்வினி சிங், மாண வர் நிகித் குமாரின் தலை முடி யை பிடித்துக் கொண்டு குச்சி யால் அடித்தும், குத்தியும் தாக்கி யுள்ளார். குச்சி உடைந்து போகவே, இரும்புக் கம்பியா லும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கதறித் துடித்த மாணவர் நிகித் குமார் ஒரு கட்டத்தில் மயங்கி  விழுந்துள்ளார். அதன்பிறகே ஆசிரியர் அஸ்வினி சிங் அடிப் பதை நிறுத்தியுள்ளார். எனினும், தண்ணீர் தெளித் தும் நிகித் குமாருக்கு மயக்கம் தெளியாததால், பயந்து போன  ஆசிரியர் அஸ்வினி சிங், வகுப்ப றையிலிருந்த மாணவர்களை வைத்து, நிகித் குமாரை மருத்து வமனையில் கொண்டு சேர்த்துள்  ளார். அங்கு உரிய சிகிச்சை வசதி கள் இல்லாத நிலையில், நிகித் குமாரை அவரது பெற்றோர் எட்  டாவா பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்துள் ளனர். இந்த மருத்துவமனையில் மாணவனுக்கான முதற்கட்ட சிகிச்சை செலவு ரூ. 40 ஆயி ரத்தை ஆசிரியர் அஸ்வினி சிங்கே ஏற்றுள்ளார். அப்போதும் மாண வனின் பெற்றோரிடம் மோசமாக நடந்து கொண்டு சாதிய ரீதியாக அஸ்வினி சிங் வசைபாடியுள ளார்.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்து வந்த தலித் மாணவர் நிகித் குமார் டோக்ரே சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 26-ஆம்  தேதி உயிரிழந்துள்ளார். இது மாணவரின் பெற்றோரை மட்டு மன்றி, உ.பி. மாநிலம் முழுவதற்  கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. ஆனால், ஆசிரியர் தாக்கி யதால் மட்டும் மாணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட வில்லை. ஏற்கனவே அந்த மாண வனுக்கு உடலில் பிரச்சனைகள் இருந்தன” என்று காவல்துறை இன்ஸ்பெக்டர் மகேந்திர பிரதாப் சிங் கூறியது, நிகித் குமாரின் உற வினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள், தங்கள் மகனின் சாவுக்கு நீதி கேட்டு, பீம் ஆர்மி உள்ளிட்ட தலித் இயக்கங்கள் அச்சால்டாவில் மறியலில் ஈடு பட்டனர். அப்போது போலீஸ் ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், போலீசார் மீது கல்வீச்சுத் தாக்கு தல்களும் நடைபெற்றன.

மூத்த காவல்துறை மற்றும் மாவட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக நிகித் குமாரின் பெற்றோரிடம் உறுதி அளித்ததையடுத்து நிகித்  குமாரின் குடும்பத்தினர் உட லைப் பெற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, ஆசிரி யர் அஸ்வினி சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் 308 (காயம் ஏற்படுத்தி உயிரிழப்பு), 323  (தன்னிச்சையாக காயப்படுத்து தல்) மற்றும் 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டு மென்றே அவமதிப்பு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்ய உத்தரவிட்ட அவுரியா  மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சாரு நிகாம், அஸ்வினி சிங்  கைப் பிடிக்க மூன்று தனிப்படை களும் அமைத்தார். இதனி டையே, ஆசிரியர் அஸ்வினி சிங்  இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

;