சென்னை,பிப்.2- ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை, மாற்றுத்திறனாளிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள் ளதால் போராட்டங்களை நடத்த ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறைகூவல் விடுத்திருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.வில் சன், மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் விடுத் திருக்கும் அறிக்கை வருமாறு:- மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 240.39 கோடியி லிருந்து 150 கோடியாக (90 கோடி) கடுமையாக நிதி குறைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய அரசு தரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பங்கு, தற்போது வரை ரூ.300 மட்டுமே. அதுவும் நாட்டிலுள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளில் 3.8 விழுக்காட்டினருக்கு மட்டுமே அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 80 விழுக்காட்டிற்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்குகிறது.
பத்தாண்டுகளுக்கு மேலாகியும், மோடி அரசு இதனை உயர்த்த மறுத்துள்ளது. கிராமப்புற மாற்றுத்திறனாளிகளும் பயன்பெற்றுவரும் 100 நாள் வேலை திட்டத்திற்கு அதிர்ச்சி அளிக்கிற வகையில் 30 விழுக்காடு நிதி ரூ.13,000 கோடி குறைத்துள்ளது.உலக வறுமை பட்டியலில் மிக மோசமாக 107வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ள நிலையில், ஊட்டச்சத்து இல்லாதது மாற்றுத்திறனாளிகளை கூடுதலாக உருவாக்குகிற அபாயம் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து-ஐசிடிஎஸ். பிரதம மந்திரி போஷன் யோஜனா மற்றும் உணவுத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு கடும் நிதி வெட்டியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளை - ஏழை களை ஒட்டுமொத்தமாக புறக்கணிக் கும், ஏமாற்றும், கார்ப்பரேட் முதலா ளிகளுக்கு ஆதரவான மோடி அரசின் மோசடி பட்ெஜட்டை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவிக்கிற வகையிலும் ஆங்காங்கே கண்டனப் போராட்டங் கள் நடத்த அகில இந்திய சங்கம் – ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறைகூவல் விடுத்துள்ள நிலையில், அதனை ஏற்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உடனடியாகப் போராட்டங்கள் நடத்து மாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.