states

விருதுநகர் சந்தை : துவரம் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு வகைகளின் விலை தொடர் உயர்வால் பொது மக்கள் அதிர்ச்சி

விருதுநகர், மே 19- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இதனால், பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப் பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு : கடலை எண்ணெய் விலையா னது 15 கிலோ கடந்த வாரம் ரூ.2750 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.20 மட்டும் குறைக்கப் பட்டு ரூ.2730 என விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில்  15 கிலோ கடந்த வாரம் ரூ.1440 என விற்கப்பட்ட நிலையில், டின் ஒன்றுக்கு ரூ.10 மட்டுமே குறைந் துள்ளது. எனவே, ஒரு டின் ரூ.1430 என விற்பனையாகிறது. முண்டு வத்தல் 100 கிலோ புதிய வகை ரூ.14ஆயிரம் முதல் 18ஆயிரம் என விற்கப்பட்ட நிலையில், சந்தை க்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் என விற்கப்படுகிறது. வத்தல் நாடு கடந்த வாரம் 100 கிலோ ரூ.12ஆயிரம் முதல் 16 ஆயிரம் என விற்கப்பட்டு வந்தது. விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு அதிக அளவில் வத்தல் வந்துள்ளதால் இந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.10ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மல்லி புதுசு வகை 40 கிலோ கடந்த வாரம் ரூ.3500 முதல் 3800 வரை விற்ப னையாது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100 குறைந்துள்ளது. எனவே,  ரூ.3400 என விற்பனை செய்யப்படு கிறது. துவரம் பருப்பு புதுசு நயம் லையன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ. 13,800 என விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.14ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதேபோல் துவரம்பருப்பு புதுசு நாடு வகையானது 100 கிலோ ரூ.12 ஆயிரம் என விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் ரூ.500 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.12,500 என விற்பனையாகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ ரூ.10,200 என விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. எனவே, குவிண்டால் ரூ.10,250 என விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ ரூ.10,500 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.10,400 என விற்கப்படுகிறது. பட்டாணி பருப்பு இந்தியா வகை 100 கிலோ ரூ.5,500 என விற்கப் பட்ட நிலையில் இந்த வாரம் குவிண்டா லுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,400க்கு விற்பனையாகிறது. வெள்ளை பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.6 ஆயிரத்திற்கு விற்கப் பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.600 குறைந்துள்ளது. எனவே ரூ.5400 என விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. 

;