states

img

மீட்டர் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை

சென்னை, செப். 25 - ஆட்டோ மீட்டர் கட்டணத்தை விரை வில் உயர்த்த தேவையான நடவடிக் கைகளை எடுப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். ஆட்டோ மீட்டர் கட்டணம் 2013ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் பெட்ரோல், எரிவாயு ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப கட்ட ணத்தை மாற்றி அமைக்க தொழிற்சங் கங்கள் கோரி வந்தன. இந்நிலையில், பெட்ரோலிய பொரு ட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இதனையடுத்து போக்கு வரத்து இணை ஆணையர் எஸ்.கே.எம். சிவக்குமரன் தலைமையில் அரசு பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது. இந்தக் குழு மே மாதம் ஆட்டோ தொழிற் சங்கங்கள், நுகர்வோருடன் ஆலோ சனை நடத்தியது. இருப்பினும், கட்டணம் மாற்றி அமைக்கப்படும் உள்ளது.

இதனையடுத்து செப்.13 தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசனை, அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பினர் சந்தித்து மனு அளித்து பேசினர். அப்போது, கேரள அரசைப் போன்று தமிழ்நாடு அரசும், ஆட்டோ செயலியை (ஆப்) உருவாக்க வேண்டும். ஆட்டோ கட்டணத்தை 1.5 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், அடுத்து  வரும் ஒவ்வொரு கிலொ மீட்டருக்கு 25 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்க கோரினர். இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை யன்று (செப்.24) போக்குவரத்து துறை  அமைச்சரை, தொமுச பொதுச் செய லாளர் சண்முகம் எம்பி, பொருளா ளர் கி.நடராஜன், சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளி ட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு சென்று விரைந்து மீட்டர் கட்டணம் உயர்த்தப்படும். நல வாரியம் வாயிலாக ஆட்டோ ஆப் தொடங்குவது தொடர்பாக ஆலோ சிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வரு கின்றன. தொழிற்சங்கங்களின் இதர கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று அமைச்சர் உறுதி அளித்த தாக எஸ்.பாலசுப்பிரமணியம் தெரி வித்தார்.

;