சென்னை, செப்.20- மியான்மர் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகள் பயங்கரவாதிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. அந்த பகுதிகள் மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த பகுதிகளை ஆயுதம் ஏந்திய குழுவினரே தங்கள் கட்டுப்பாட் டுக்குள் வைத்துள்ளனர். அவர்கள் பெருமளவில் சைபர் கிரைம் குற்றங் களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அங்கு சமூக விரோத நடவடிக்கைகள் அதிகம் நடை பெறுகிறது. வங்கி கணக்கில் யார்-யார்? எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவற்றை திருடு வது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். வெளி நாடுகளை சேர்ந்த நபர்களை கடத்திச் சென்று பிணை கைதிகளாக வைத்து அவர்களை சைபர்கிரைம் குற்றங்களில் ஈடுபட வைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள இளைஞர் களையும் அவர்கள் கடத்தி வைத்து உள்ளனர். இந்தியாவில் உள்ள இளை ஞர்கள் 300 பேர் அதுபோன்று சிக்கியுள் ளனர். இதில் 60 தமிழர்கள் பிணை கைதி களாக மியான்மர் நாட்டில் தவிக்கி றார்கள். சில பிணைய கைதிகள் தங்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் பிணை கைதிகளாக சிக்கியுள்ளதாக வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். தங் களை சைபர்-கிரைம் குற்றங்களில் ஈடுபடும்படி ‘எலக்ட்ரிக் ஷாக்’ கொடுத்து சித்ரவதை செய்வதாக கூறி உள்ளனர். மியான்மரில் மியாவாடி பகுதியில் அவர்கள் அனைவரும் பிணை கைதிக ளாக உள்ளனர். தங்களை மீட்குமாறு அவர்கள் ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள் ளனர். தினமும் 15 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்யும்படி அவர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி காரைக் காலை சேர்ந்த கிளிஞ்சல் மேடு கிராமத்தை சேர்ந்த பொறியாளர் தீப மணி (30) என்பவரையும் மியான்மர் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ள னர். இதுதொடர்பாக அவரது தந்தை ராஜா சுப்பிரமணியம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூரி டம் மனு கொடுத்துள்ளார்.