states

img

குழந்தைகளுக்கான கதை நூல் - ஆர்.மைதிலி

புத்தகத்தின் பெயரே  சூப்பர்,
பொதுவாக குழந்தைகளுக் காக என சொல்லி வருகிற நூல்களை படித்தால், பெரியவர்களும் கற்றுக்கொள் ளும் விஷயங்கள் இருக்கவே  செய்கின்றன.
“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பது போல் ,கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் சிறு   துணுக்கு  சீட்டிலும் கற்பார்கள்.
புத்தகத்தில் வரும் 15 கதைகளும்  அறிவியல் பூர்வமாக,  ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலுமாய் குழந்தைகள் கேள்விகள் கேட்பதும் அவர்களே பதில் சொல்வதும், இல்லை என்றால் ஆசிரியர் பதில்  சொல்வதுமாய் வருகிறது.
படி என்று சொன்னாலே வேப்பங் காயாய் கசக்கிறது குழந்தைகளுக்கு. பள்ளி பாடப் புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை படிக்க குழந்தைகளை அனுமதிக்கிறோமா? என்ற கேள்வியும் எழுகிறது. தொலைக்காட்சி, அலைபேசி இவற்றின்   பிடியிலிருந்து  விடுபட, இதுபோன்ற புத்தகங்கள் எல்லா வீட்டிலும் இருக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் படிக்கலாம். (தன் பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்ல) அதுவும் அறிவியலாய், முற்போக்காய், சமூக அக்கறை உள்ளவ ராய், குழந்தைகளை மாற்ற உதவும்.
மாதா பிதா  யூ டியூப் தெய்வம்
ஆசிரியர் :  கணேஷ்,
வெளியீடு : ஜி ஆல்ட்டர், கோவை
பக்கம்: 64 / விலை ரூ.70