2024-க்குள் மாநிலம் தோறும் என்ஐஏ கிளைகள்: அமித்ஷா
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா. தேசிய புலனாய்வு முகமையின் (NIA) கிளை அலுவலகத்தை ராய்ப்பூரில் திறந்து வைத்துப் பேசியுள்ளார். அப்போது, 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலு வலகங்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். “என்ஐஏ இப்போது சர்வதேச அளவில் ஒரு முதன்மை விசாரணை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய வீழ்ச்சிக்குப் பிறகு, நிறு வனம் அதன் அனைத்து இலக்குகளையும் அடைய முடிந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போபாலில் குளோரின் வாயு கசிவு: 7 பேர் பாதிப்பு
மத்தியப் பிரதேச மாநிலம், இத்கா மலையில் உள்ள போபால் மாநகராட்சியின் நீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் புதன்கிழமை 900 கிலோ எடையுள்ள குளோரின் சிலிண்டர் கசிந்தது. இதில், ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் 7 பேர் மூச்சுத் திணறல், இருமல் மற்றும் வாந்தி போன்ற உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எரிவாயு கசிவு கவனிக்கப் பட்டதை அடுத்து, வடிகட்டுதல் ஆலையில் சிலிண்டர் தண்ணீரில் வீசப்பட்டது. மேலும் ஆலை யில் ஏற்பட்ட பழுது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இதே போபாலில், 1984 டிசம்பரில் ஏற்பட்ட செயல்படாத யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையை சுவாசித்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் போபாலில் கொல்லப்பட்டனர். ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இமாசலில் 68 எம்எல்ஏ பதவிக்கு 630 பேர் வேட்புமனு!
இமாசலப்பிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலை யில், 68 எம்எல்ஏ பதவிக்கு 630 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர் இறுதிப் பட்டியல் வரும் 29-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலையொட்டி, ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம்: மணீஷ் திவாரி கருத்து
இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி புகைப்படம் ஒருபுறமும், விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்கள் மறுபுறமும் அச்சிட வேண்டும் என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், “புதிதாக அச்சடிக்கப்படவுள்ள இந்திய ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது?” என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். “அகிம்சைவாதம், சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமை அம்பேத்கர்” எனவும் திவாரி குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை இழிவாக குறிப்பிடுவதும் பாலியல் துன்புறுத்தலே!
பெண்களை ‘ஐட்டம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தால் அதுவும் பாலி யல் துன்புறுத்தல்தான் என்று மும்பை தின்தோஷி செசன்ஷ் நீதிமன்றம் உறுதி செய்துள் ளது. சிறுமியை “ஐட்டம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்த அப்ரர் கான் என்ற நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. “இந்த வார்த்தை ஆண்களால் பெண்களை இழிவான முறையில் பேச பயன் படுத்தப்படுகிறது. ஏனெனில், அது பாலியல் ரீதியாக அவர்களைப் புறக்கணிக்கிறது” என்று சிறப்பு நீதிபதி எஸ்.ஜே. அன்சாரி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர்களிடம் பணம் பெற்றே ‘ஜன் சூரஜ்’ யாத்திரை
பிரசாந்த் கிஷோர் நடத்தும் ‘ஜன் சூரஜ்’ பிரச்சாரத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில், “கடந்த பத்தாண்டில், குறைந்தது 10 தேர்தல்களுக்கு நான் எனது சேவையை வழங்கினேன், ஒன்றைத் தவிர அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளேன். நான் வெற்றி பெற உதவியவர்களில் குறைந்தது ஆறு பேர் இப்போது முதல்வர்கள். நான் அவர்களிடமிருந்து பணம் வாங்கவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னை நம்பவில்லை. ஆனால் இப்போது பீகாரில் மேற்கொண்டு வரும் சோதனைக்கு அவர்களின் (என்னால் முதல்வர் ஆனவர்களின்) உதவியை நாடுகிறேன்” என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார்.
ரூபாய் நோட்டில் மோடி படத்தைப் போட்ட பாஜக எம்எல்ஏ
ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்குப் பதிலாக சுபாஷ் சந்திர போஸ் படத்தை பொறிக்க வேண்டும் என்று இந்து மகா சபா அமைப்பு கடந்த வாரம் கூறியிருந்தது. இதனிடையே தில்லி முதல்வர் கெஜ்ரிவால், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என்றார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ ராம் கதம் என்பவர் பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களையே, போட்டோஷாப் மூலம் மார்பிங் செய்து டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மோடி, கடவுளின் அவதாரம்: உ.பி. அமைச்சர் சொல்கிறார்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று உள்ளார். இதைப்போல இந்தியாவிலும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இந்த கருத்து குறித்து உத்தரப் பிரதேச மேல்நிலைக்கல்வித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) குலாப் தேவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி னர். அதற்கு ‘பிரதமர் மோடி ஒரு அவதாரத்தை போன்றவர். அசாத்திய திறமைகளை கொண்ட ஒரு மனிதர். அவருடன் யாரும் போட்டியிட முடியாது. அவர் விரும்பினால், அவர் உயிருடன் இருக்கும் வரை பிரதமராக இருக்கலாம். யூகத்தால் எதுவும் நடக்காது. அவ்வளவு அசாதார ணமான ஆளுமை அவர். கடவுள் அவரை தனது பிரதிநிதியாக அனுப்பியுள்ளார்’ என சாமி யாடாத குறையாக பேட்டி அளித்துள்ளார்.
அசாமில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்
அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 1.263 கிலோ ஹெராயின் அடங்கிய 100 பாக்கெட் சோப் கேஸ்கள் மற்றும் ரொக்கம் ரூ. 75 ஆயிரத்தை அசாம் போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்.
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி: முதலமைச்சர் மதுரை பயணம்
சென்னை, அக்.27- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு வருகிற 30 ஆம் தேதி பயணம் மேற் கொள்கிறார். இதற்காக சென்னையி லிருந்து சனிக்கிழமையன்று (அக்.29) மாலை 6 மணிக்கு விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதுரையில் இரவு தங்கும் அவர் ஞாயிற்றுக்கிழமை (அக்.30) காலையில் மதுரை கோரிப்பாளையத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து கிறார். அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினை விடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 30 ஆம் தேதி மதியம் சென்னை திரும்புகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி சிறப்பு பேருந்துகளால் ரூ.9.54 கோடி வருவாய்
சென்னை, அக்.27- தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 2.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ள னர். இதன் மூலம் ரூ.9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் தீபாவளிக்காக அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் மொத்தம் 2.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத் துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக போக்கு வரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படைக்கு வைகோ கண்டனம்
சென்னை, அக்.27- இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் மீன்துறை அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது நள்ளிரவு 7 மீனவர்களையும் கைது செய்த னர். அவர்கள் சென்ற விசைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரி மைப் பெற்றுள்ள தமிழ்நாட்டு மீனவர் களை சிங்கள கடற்படை தாக்குவதும், கைது செய்து இலங்கை சிறைகளில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகள் ஆகி விட்டன. இது வன்மையான கண்டனத் துக்கு உரியது. ஒன்றிய பாஜக அரசு தமிழக மீனவர் கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளா மல் இருப்பதால்தான் இலங்கை அரசு இந்த அட்டூழியங்களை தொடர்ந்து வருகிறது. ஒன்றிய அரசு உடனடியாக தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
‘திருநர்’ நலக் கொள்கை: முதல்வரிடம் சமர்ப்பிப்பு
சென்னை, அக்.27- தமிழ்நாடு திருநர் நலக் கொள்கை உட்பட 3 புதிய கொள்கைள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாநில திட்டக் குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயல கத்தில் வியாழனன்று (அக்.27) நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பணி முடிவுற்ற நிலையில் உள்ள ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை (மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா ), தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை, திருநர் நலக் கொள்கைகள் ஆகியவை குறித்து முதல்வரிடம் விரிவாக எடுத் துரைக்கப்பட்டது. மேலும், இக்கொள் கைகளை செயல்படுத்துதல் மற்றும் முக்கிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தொழில் மயமாதல் கொள்கை குறித்து மல்லிகா சீனிவாசன், தமிழ்நாடு மருத்துவக் கொள்கை குறித்து அமலொற்பவ நாதன், திருநர் நலக்கொள்கை குறித்து முனைவர் நர்த்தகி நட்ராஜ் ஆகியோர் விவரித்தனர்.
மனநல ஆலோசனைக்கு 14416 இல் தொடர்பு கொள்ளலாம்!
சென்னை, அக்.27- சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மனநல சேவை அழைப்பு மையத்தை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வியாழனன்று (அக்.27) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தொலைதூர மனநல சேவை மையம் ரூ.2 கோடியே 6 லட்சத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 14416 புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனநல ஆற்றுதல் படுத்தும் சேவை, வீடியோ பதிவு ஆலோசனை தொடர்ச்சியான வழிகாட்டு முறைகள் மனநல சேவை வழியாக அளிக்கப்படும். ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது. அதுபோல மன உளைச்சல் கொண்டவர்களுக்கு அதற்கான தீர்வு இதன் மூலம் வழங்கப்படும். இந்த மையத்தில் மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுதல்படுத்துபவர்கள் செயல்படுவார் கள். நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை. மருத்துவமனை உரிய ஆவணங்களை மறைத் துள்ளது. அதற்காக அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் து.ராஜா கருத்து
புதுதில்லி, அக்.27- அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைக்க ஆளுநர் ஆரிப் முகமது கான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, ‘இப்படியே தொடர்ந்தால் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப அழைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ஜனநாயக அமைப்பில் ஆளுநர் பதவி தேவையா என்பதை சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க பாஜக-சங் பரிவார் நிகழ்ச்சி நிரலுடன் ஆரிப் முகமது கான் முயற்சிக்கிறார். கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் பா.ஜ.க- வால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் இப்படித்தான் செயல்படுகின்ற னர். இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் து. ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
முந்தைய காலாண்டைக் காட்டிலும் 52% அதிகம் யூனியன் வங்கி நிகர லாபம் ரூ. 1,848 கோடியாக உயர்வு!
புதுதில்லி, அக். 27 - 2022-23 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ. 1,848 கோடியாக வளா்ச்சி அடைந்துள்ளது. முந்தைய 2021-22 நிதியாண்டின் இதே 2-ஆவது காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபத்துடன் ஒப்பிடுகை யில், நடப்பாண்டில் 52 சதவிதம் லாபம் அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 21.61 சதவிகிதம் அதிகரித்து ரூ. 8 ஆயிரத்து 305 கோடியாக உள் ளது. இந்தக் காலத்தில் வங்கி ரூ. 2 ஆயி ரத்து 900 கோடி புதிய வராக் கடனை எதிர்கொண்டது. ஆனால் மீட்பு செயல்முறைகள் மூலம் ரூ. 5 ஆயி ரத்து 100 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 1,700 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே வந்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண் டின் இரண்டாவது காலாண்டில் வட்டி வருவாய் 17.81 சதவிகிதம் அதிகரித்து ரூ. 19 ஆயிரத்து 682 கோடியாகவும், வட்டி செலவினங்கள் 15.2 சதவிகிதம் உயர்ந்து ரூ. 11 ஆயிரத்து 377 கோடி யாகவும் உள்ளது.